கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தினை கற்போர்‌

  • மனிதர்களுக்கும்‌ தாவரங்களுக்கும்‌ இடையேயுள்ள தொடர்பை அறியவும்‌

  • வேளாண்மையின்‌ தோற்றந்தை: அடையாளம்‌ காணவும்‌

  • இயற்கை வேளாண்மையின்‌: முக்கியத்துவத்தைத்தெரிந்து கொள்ளவும்‌

  • பல்வேறுமரபு சார்ந்த பயிர்ப்வருக்க முறைகளைப்புரிந்துகாள்ளவும்‌.

  • விதையாதுகாப்பிற்கம்‌, விதை சேமித்துக்கும்‌ உள்ள முக்கியத்துவத்தை உணரவும்‌

  • பழையமற்றும்புதியவிதைசேமி்பு முறைகளை ஒட்டவும்‌ இரும்‌.



பாட உள்ளடக்கம்

9.1 மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு 9.2 தாவரங்களை வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்துதல் 9.3 வேளாண்மையின் தோற்றம் 9.4 இயற்கை வேளாண்மை 9.5 பயிர் பெருக்கம் 9.6 பாரம்பரியப் பயிர் பெருக்க முறைகள் 9.7 நவீனதாவரப் பயிர்ப்பெருக்க தொழில்நுப்பம் 9.8 விதை பாதுகாத்தல் 9.9 விதை சேகரம

மனிதர்களுக்கும்‌ பொருளாஹா முக்கியத்துவம்‌ வய்்க தாஷங்களுக்கும்‌ இடையேயுள்ள தொடர்பைப்‌ பற்றி மஷப்பது வோருளாதாறத்‌ தாவரவியல்‌ எனப்ப. இது மனிதர்களுக்கும்‌ பயன்படும்‌ உணவுத்‌ தாவரங்கள்‌, மருத்துவத்‌ தாவரங்கள்‌ மற்றும்‌ இர தேவைகளுக்குப்‌ பயன்படும்‌ தாவரங்களைப்‌ பற்றிய ஆய்வுப்‌ பிரவாகம்‌ பொருளாதாரத்‌. நாவரவியலானது…. உழவியல்‌, மானுடவியல்‌, தொல்லியல்‌, வேதியியல்‌, சில்லறை மற்றம்‌ வருவணிகத்‌ துறைகளை இணைக்கிறது.

மனிதர்களுக்கும்‌ தாவரங்களுக்கும்‌ இடையேயுள்ள தொடர்பு

மனிதனானவன்‌ உமர்‌ வாழ. முக்கியத்‌ தேவையான தாஷரங்களுடன்‌ பல காலங்களுக்கு முன்னரே… பின்னிப்பினைந்த வாழ்க்கையை: மேற்கொண்டுள்ளான்‌. பலகட்ட. சோதனை: முயழ்சிகளக்கப்பின்னர்‌ நமது முன்னோர்கள்‌ மனிகம்‌ “தேவைக்காக உலகின்‌ மல பகுதிகளிலிருந்து பலநூறு, காட்டத்‌ தாவரங்களை வளர்ப்ப பயர்களாக (ராகு மலர்களாக) தேர்நதடக்கனர்‌…. தாவரங்களையும்‌ அவற்றின்‌ பயன்களைப்‌ பற்றியதுமான இந்த சிவ, மணித நாகரிக வளர்ச்சிக்கும்‌ பல வகைகளில்‌. வழிகோலியது.

தாவரங்களை வளர்ப்பச்சூழலுக்கு உட்பருத்துதல்‌.

தாவரங்களை வளற்ப்பச்ழலுக்கு உட்டடு்தல்‌. என்பது. தாவரச்‌. சிற்றினங்களை மனிதனின்‌. கட்டுக்கள்‌ கொண்டு வருவதாகம்‌. ‘இவற்றைக்கவனமாகத்‌ தேர்ந்தெுக்தல்‌, மரபுண்பு மாற்றம்‌… ஊய்தல்‌.. மற்றும்‌… கையாளுதல்‌. மூலமாகபடப்படியாகப்‌ பெரும்பாலான மக்களுக்கு உதவம்‌வகையில்‌மாற்நுகலாகம்‌. ஊள்ப்பச்சமலுக்கு “இணைக்கப்பட்ட தாவரச்‌ சிற்றினங்கள்‌ மனிதனுக்கு ம்ம்‌ பல்வேறு பயன்களைத்‌ தருகின்ற மு்பிக்கல கூடிய மூலங்களாக விளங்குகின்றன. வளர்பப்கழலுக்கு உட்பு்கப்படவதால்‌ தாவரச்‌ சிற்றினங்களில்‌ ஏற்படும்‌… மாற்றங்களைக்‌. ‘ீழ்கண்டவாறு வறிசைப்பட்கலாம்‌.

  • பல்வேறு சூழல்காரணிகளுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளுதல் மற்றும் பரவலான புவிப்பரப்பில் வளரும் தன்மை கொண்டவை.

• ஒருமித்த மற்றும் சீரான முறையில் பூத்தல் மற்றும் காய்த்தல் • விதை சிதறல் மற்றும் விதை பரப்பல் இல்லாதிருத்தல். • கனிகள் மற்றும் விதைகளின் அளவை அதிகரித்தல் • பலபருவ வளரியல்பிலிருந்து ஒரு பருவ வளரியல்புக்கு மாற்றுதல். • பயிர்பெருக்க முறையில் மாற்றம். • அதிக விளைச்சல். • அதிக நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு திறனைப் பெற்றிருத்தல் . • விதையற்ற கனிகளைக் கருவுறாக் கனியாதல் முறை மூலம் உருவாக்குதல். • நிறம், தோற்றம், உண்ணும்தன்மை மற்றும் ஊட்டச்சத்துக்களை அதிகரித்தல்.

வேளாண்மையின்‌ தோற்றம்‌

மிகத் தொன்மையான வேளாண்மைக்கான பதிவை டைக்ரிஸ் மற்றும் யுஃபரேட்ஸ் நதிப்படுகைகளுக்கு இடையேயுள்ள செழுமை பிறைப் பகுதியில் ஏறக்குறைய 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைத் தொல்லியல் தரவுகள் மூலம் அறியலாம். பழைய கிரேக்க மற்றும் ரோமானிய இயற்கை வல்லுநர்களான தியோஃபராஸ்டஸ், டையோஸ்கோரிடிஸ், மூத்த பிளனி, கேளன் ஆகியோர் பயிர் தாவரங்களின் தோற்றம் மற்றும் வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்துதல் குறித்த அறிவியல்பூர்வமான புரிதலுக்கு வழிகோலினர்.

இயற்கை வேளாண்மை (Organicagriculture)

பழைய பாரம்பரிய விவசாய முறையே இயற்கை வேளாண்மையாகும். இது 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் மிக வேகமாக மாறிவரும் விவசாய முறைகளுக்கு எதிராக மீட்டுக் கொண்டு வரப்பட்டது. இது மீள்நிலைத்த மண்வளம், சூழல்வளம் மற்றும் மக்கள் வளத்திற்கான வேளாண் முறையாகும். இது கேடுவிளைவிக்கும் இடுமுறைகளை விட வட்டாரச் சூழல்நடைமுறைகள், உயிரிபல்வகைமை மற்றும் இயற்கை சுழற்சிகள் ப�ோன்ற தகவமைப்புகளைச் சார்ந்திருக்கிறது .

உயிரி உரங்கள் (Biofertilizers)

உயிரி உரம் என்பது உயிருள்ள அல்லது மறையுயிர் செல்களின் செயலாக்கம் மிக்க நுண்ணுயிரி இரகங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது . இவ்வுயிரி உரங்கள் விதை மூலமாகவோ, மண் மூலமாகவோ இடப்படும்போது தங்களுடைய

படம் 9.1: வரைபடம் – பிறைச்சந்திரவடிவ பகுதிகளைக் குறிக்கும் வரைபடம்

வினையாற்றல் மூலம் வேர்மண்டலத்திலுள்ள ஊட்டச்சத்துக்களைப் பயிர்கள் எடுத்துக்கொள்ள உதவுகின்றன. உயிரி உரங்கள் நுண்ணுயிரி வளர்ப்பு உரம், உயிரி உட்புகுத்திய உரங்கள் மற்றும் பாக்டீரிய உட்புகுத்தி உரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை நைட்ரஜனை நிலை நிறுத்துதலிலும், பாஸ்பேட்டைக் கரைப்பதிலும் மற்றும் செல்லுலோசை சிதைப்பதிலும் செயல்திறன் மிக்கவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் உயிரிய செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்கின்றன. இவை மண்ணின் வளத்தையும், தாவர வளர்ச்சியையும், மண்ணில் வாழும் பயன்தரு நுண்ணுயிரிகளின

இந்தியப் பயிர் பெருக்கவியலாளர்கள் அ. Dr. M.S. சுவாமிநாதன் - சடுதி மாற்றப் பயிர் பெருக்கத்தின் முன்னோடி ஆ. சர் T.S. வெங்கடராமன் - சிறந்த கரும்பு பெருக்கவியலாளர் இ. Dr. B.P. பால் - புகழ்பெற்ற கோதுமை பெருக்கவியலாளர். மேம்பட்ட நோய் தாங்கும் திறனுடைய கோதுமை இரகத்தை உருவாக்கியவர். ஈ. Dr. K. ராமையா - பல உயர் விளைச்சல் நெல் இரகங்களை உருவாக்கிய புகழ்பெற்ற நெல் பெருக்கவியலாளர். உ. N.G.P. ராவ் - உலகின் முதல் கலப்பினச் ச�ோளத்தை (CSH I) உருவாக்கிய சிறந்த ச�ோளப்பயிர் பெருக்கவியலாளர். ஊ. C.T. படேல் - கலப்பினப் பருத்தியின் தந்தையான இவர் உலகின் முதல் கலப்பினப் பருத்தியை உருவாக்கியவர். எ. சவுத்ரி ராம் தன் - பஞ்சாபைக் கோதுமைக் களஞ்சியமாக மாற்றிய C 591 கோதுமை இரகத்தை உருவாக்கிய கோதுமை பெருக்கவியலாளர

செயல்களை அதிகரிப்பதிலும்‌ உதவுகின்றன. இவை சற்றுச்சரலுக்கு உகந்த இயற்கை வேளாண்மைக்கு “உதவும்‌ இடபோருளாகவம்‌, வேதிய உரங்களை விடக்‌ ‘திறன்மிக்கவையாகவும்‌, விலை மலிவானநாகலும்‌ படம்‌ 92: உயிரி உரங்களின்‌ வகைப்பாட, ரைசோபியம்‌ (ஷியா

‘ரைமேயியம்‌ பாக்கரியாவைக்‌ கொண்டுள்ள உயிரி, உரத்திற்கு ரைசோபிய உயிரி வளர்ப்பு உரம்‌ என்று வயர்‌. வேர்‌ முண்டுகளிலுள்ள கூட்டமிர்‌ பாக்மரியமானது ‘வளிமண்டலத்திலுள்ள. ‘நைப்ரஜனைத்‌ நாவரங்களுக்குக்‌ தேவையான: உமிறிநைப்ரஜனாகமாற்றித்தருகிறது. நைட்ரஜனை:

நிலைநிறுத்தம்‌ இந்தப்‌ பாக்கரியாவை மண்ணில்‌. “இடம்போது அவை ஆயிரக்கணக்கில்‌ பல்கிப்‌ பருகி. வளிமண்டல… நைப்ரரனை மண்ணில்‌. இலைநிறுக்துகின்றன. நெல்‌ வயல்களுக்கு உகந்த. உமிரி உரம்‌ ரைசோயியம்‌ ஆகும்‌. இது ஜல்‌. “விளைச்சலை 15 முதல்‌ 40 % வரை அதிகரிக்கச்‌ செய்கிறது.

அசோலா((Azolla)

“அசோலா என்பது மிதக்கும்‌ நீர்வாழ்‌ பெரணியாகம்‌. ‘இதுநைட்ரஜனைநிலைநிறுக்தம்‌நீலப்பசம்பாசியான. அனமீனா அசோலாவுடன்‌ இணைந்து வளிமண்டல. ‘நைப்ரஜனை நிலை நிறுத்துகிறது. 9ல்‌ சாகுபடி செய்யும்‌ நிலங்களில்‌ ஒரு ஒஹக்டேருக்கு 40 முதல்‌. (60 கிகி. பயிர்‌ விளைச்சலை அதிகப்படுத்துகிறது. ல்‌ பயிரிடும்‌ உழவு நிலங்களில்‌ அசோலா மிக. விரைவாகச்‌. சிதைவடைந்து… நற்பமிர்களின்‌.

ஆர்பஸ்குவ்‌ வேர்‌ பூச்சை (லல (ரவா)

படம் 9.5: ஆர்பஸ்குலார் வேர் பூஞ்சையின் பயன்கள மூழுவிகைத்காவரங்களின்‌ வேர்களில்‌ கட்டர்‌ வாழ்க்கை நடத்தும்‌ ஃபைகோமைசிட்ஸ்‌ பூஞ்சையால்‌. உருவாகிறது. இவை மண்ணில்‌ அதிகமாக உள்ள மாஸ்பேட்மளை: கரைக்கும்‌… திறனுபையவை. அதோடுமப்டமல்லாமல்‌ நோய்‌ எதிர்க்கும்‌ திறனையும்‌, சாதகமற்ற கழ்நிலையைத்‌ தாங்கும்‌. திறனையும்‌, நலத்தில்‌ நீர இருப்பதையும்‌ உறுகிப்பத்துகின்றன.

கடற்பாசிதிரவ உரம்‌ ௫ண்டை!(பலாளகன பே) கடற்பாசி. திரவ உரம்‌… என்பது வரு மற்றும்‌ நுண்ணூட்டச்‌… சத்துக்கள்‌… மட்டுமின்றி சைட்டோகைனின்‌ ஜிப்ரலின் மற்றும் ஆக்சி னை யு ம் க ொண்டுள ்ள து . ப ெ ரு ம்பா லு ம் கடற்பாசி திரவ உரமானது கெல்ப் (kelp) எனப்படும் ஒரு வகையான 150 மீட்டர் உயரம் வளரும் பழுப்பு கடற்பாசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. திரவக் கடற்பாசி உரம் கரிமஉரமாக பயன்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுசூழலுக்கும் உகந்ததாக உள்ளது. கடற்பாசியிலுள்ள ஆல்ஜினேட்டுகள் மண்ணிலுள்ள உலோகங்களுடன் வினைபுரிந்து, நீண்ட ஒன்றுடன் ஒன்று குறுக்கே இணைந்த பாலிமர்களை உருவாக்குகின்றன. இப்பாலிமர்கள் மண்ணைச் சிறுதுகள்களாக்குவதோடு மட்டுமல்லாமல் நீர் பட்டதும் விரிந்து ஈரப்பதத்தை நீண்டநேரம் தக்கவைக்கின்றன. முக்கியமாக இவை இயற்கை வேளாண்மையில் தாவரங்களுக்கு மாவுச்சத்தை அளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. கடற்பாசிகளில் 70-க்கும் மேற்பட்ட கனிமங்கள், வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளதால் தாவரங்களில் அபரிமிதமான வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. நோய் மற்றும் உறைபனியைத் தாங்கும் திறனையும் அதிகரிக்கின்றன. கடற்பாசி திரவத்தில் விதைகளை ஊறவைத்து விதைத்தால் அவை வேகமாக முளைப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த வேர்தொகுப்பையும் உருவாக்குகின்றன

உமிரியூச்சிக்ஷால்லிகள்‌ (Bio-pesticides) உமிரிகளை அடிப்படையாகக்‌ கொண்ட தாவர: நோயுமிரிகளை கட்டப்புததும்‌ பூச்சிகால்லிகள்‌ உமரி பூர்சிக்கால்லிகள்‌ எனப்படும்‌. வேதி மற்றும்‌ செயற்கை. பூச்சிகால்லிகளுடன்‌ ஒப்பிடும்‌ போது, உயிரி பூச்சிக்‌ கொல்லிகள்‌ நச்சந்தன்மையற்றம்‌, மலிவாகவும்‌, சூழலுக்கு… உகந்த. தன்மை: கொண்டதாகவும்‌ இருப்பதனால்‌ அதிக அளவில்‌: மயன்பருத்தப்படுகின்றன. வேளாண்மையில்‌.

பயன்படுத்தப்படும் வேதி ப�ொருட்களால் ஏற்படும் சூழல் மற்றும் உடல்நலன் சார்ந்த பிரச்சனைகளினால் உயிரி பூச்சிக் கொல்லிகள் நோயுயிரி மேலாண்மையில் ஒருங்கிணைந்த உட்கூறாக உள்ளன. ட்ரைக�ோடெர்மா சிற்றினம் ப�ொதுவாக மண்ணிலும், வேர்தொகுதியிலும் தனித்து வாழும் பூஞ்சையாகும். இவை வேருடனும், மண் சுற்றுச்சூழலுடனும் நெருங்கிய தொடர்புடைய காரணியாகக் கருதப்படுகின்றன. இவை உயிரி கட்டுப்படுத்தும் காரணியாக அங்கீகாரம் பெற்றிருத்தலுக்கான காரணம்: (1) தாவர நோய்களைக் கட்டுப்படுத்துதல் (2) வேரின் வளர்ச்சிப் பெருக்கத்தைத் திறம்பட மேம்படுத்துகிறது (3) பயிர் உற்பத்தி (4) உயிரற்ற காரணிகளின் இறுக்கத்தைத் தாங்கும் திறன் (5) சத்துக்களை உள்ளெடுத்தல் மற்றும் பயன்படுத்துதல

படம் 9.7: (அ) ட்ரைக�ோடெர்மா பூஞ் (ஆ) உயிரியூச்சிக்கால்லி.

பியூவிரயா சிற்றினம்‌ என்பது. உலககங்கிலும்‌ மண்ணில்‌ இயற்கையாக வாழக்கூடிய ஒரு பூச்சி நோயுயிரி (னரிமால ரிம்‌) பூஞ்சையாகம்‌. இவை பல்வேறு கணுக்காலி சிற்றினங்களில்‌ ஒட்டுண்ணியாக வாழ்ந்து வெள்ளை மஸ்கர்டைன்‌

படம்‌ 9.8:(அ) பியூவிரியாயூஞ்சை(ஆ) பியவிரியா. சிற்றினத்தால்‌ தாக்கப்பட்டபச்சி(இபூர்சயின்‌: மேலுள்ள நோயுயிரிப்பூக்சை

நோயைத்‌ தாவரத்தின்‌ வளர்ச்சியைப்‌ பாதிக்காதவாறு ஒற்பருத்துகின்றன. இது ரைசாக்டோனியா வாலா. என்ற பூஞ்சையால்‌ தக்காளியில்‌ ஏற்படுத்தப்‌ நாற்றுமஷதல்‌ நோயைக்‌ கட்டப்படத்துகிறத.

தழை உரமிடல்‌ (Green manuring) தழை. உரம்‌. பமிற்களை வார்த்து அவற்றை. நேரிடையாக வயல்களனிட்டு உழுவது தழை உர “இடமாகும்‌. தழை உர இடலின்முக்கியக்குறிக்கோளில்‌ இன்று மண்ணிலுள்ள தழைச்சத்தை (நைட்ரஜனை! உயர்த்துகலாகும்‌.. கதோடு மட்டுமல்லாமல்‌ இது, மண்ணின்‌ அமைப்பையும்‌ இயற்பியல்காரணியையும்‌ மேம்படுத்துகிறது. தழை உரமாகப்‌ பயன்படத்தப்மம்‌ முக்கியப்‌ பயிர்கள்‌ கீரோடலேரியா இன்சியே. (சணப்பை, உஃஃ்ரோசியா வர்பியூரியா (கொழிக்சி, ‘இண்டிர்காஃவரா டிங்போரியா (சவரி)

தழை உரப் பயிர்களை வளர்த்து அவற்றை நேரிடையாக வயல்களிலிட்டு உழுவது தழை உர இடலாகும். தழை உர இடலின் முக்கியக் குறிக்கோளில் ஒன்று மண்ணிலுள்ள தழைச்சத்தை (நைட்ரஜனை) உயர்த்துதலாகும். அதோடு மட்டுமல்லாமல் இது மண்ணின் அமைப்பையும், இயற்பியல் காரணியையும் மேம்படுத்துகிறது. தழை உரமாகப் பயன்படுத்தப்படும் முக்கியப் பயிர்கள் க்ரோடலேரியா ஜன்சியே (சணப்பை), டெஃப்ரோசியா பெர்பியூரியா (கொழிஞ்சி), இண்டிக�ோஃபெரா டிங்டோரியா (அவுரி)

பயிர் பெருக்கம்

தகுந்த சூழ்நிலையில் பயிர் வகைகளில் உயர் விளைச்சல், சிறந்த தரம், நோய் எதிர்ப்புத் திறன், குறுகிய கால வாழ்நாள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அறிவியலே பயிர்ப் பெருக்கம் ஆகும். மற்றொரு வகையில் இது மனிதப் பயன்பாட்டிற்காகத் தாவரச் சிற்றினங்களின் மரபணுவகைய விகிதத்தையும், புறத்தோற்ற வகைய விகிதத்தையும் ஒரு குறிக்கோளுடன் மாற்றியமைத்துக் கையாளுதலைக் குறிக்கும். பயிர் பெருக்கத்தில் ஈடுபடும் மனிதர்களின் திறன் மற்றும் கையாளுதலைப் ப�ொறுத்து முற்காலப் பயிர் பெருக்க முறைகள் இருந்தன. ஆனால் மரபியல் மற்றும் செல்மரபியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவான பயிர்பெருக்க முறைகளான தேர்ந்தெடுத்தல், அறிமுகப்படுத்துதல், கலப்பு செய்தல், பன்மடியம், சடுதி மாற்றம், திசு வளர்ப்பு மற்றும் உயிரிதொழில் நுட்பவியல் ப�ோன்ற தொழில்நுட்பங்கள் பயிர் இரகங்களை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்டன. கொரயயிர்‌ வருக்கததன்‌ குறிக்கோள்கள்‌ மம்களின்‌ விளைச்சலையும்‌, விரியத்தைய்‌, வனமையையும்‌ சதிகரக்க்‌

பயிர் பெருக்கத்தின் குறிக்கோள்கள்

• பயிர்களின் விளைச்சலையும், வீரியத்தையும், வளமையையும் அதிகரித்தல். • வறட்சி, வெப்பநிலை, உவர்தன்மை மற்றும் அனைத்துச் சூழ்நிலைகளையும் தாங்கி வளரும் திறன். • முதிர்ச்சிக்கு முன்னரே மொட்டுகள் மற்றும் பழங்கள் உதிர்வடைதலை தடுத்தல். • சீரான முதிர்ச்சியை மேம்படுத்தல் • பூச்சி மற்றும் நோய் உயிரிகளை எதிர்த்து வாழும் திறன். • ஒளி மற்றும் வெப்பக் கூருணர்வு இரகங்களை உருவாக்குதல் இ ிளபககண்டு

பயிர் பெருக்கத்தின் படிநிலைகள்(Steps in Plant breeding)

பயிர் பெருக்கத்தின் முக்கியப் படிநிலைகள் கீழே தரப்பட்டுள்ளன. விதைப்பெருக்கம் மற்றும் விநியோகம் படம் படம்‌ 9: பயிர்‌ பெருக்கத்தின்‌ படிநிலைகள்‌:

பாறம்பறியம்‌ பமிர்‌ பெருக்க முறைகள்‌ (Conventional plant breeding methods

பாரம்பறியதாவரப்‌ பயிர்‌ பருக்க முறைகள்‌ கடந்த பத்தாண்டுகளில்‌ பயிர்‌ விளைச்சலில்‌ பெரும்‌ நதாக்கந்தை ஏற்பரத்தியள்ளன.. ஒரு புதிய தாவர இரகம்‌ அதில்‌ ஏற்கனவே அமைந்துள்ள மரபுக்கூறுகளைச்சிறந்த முறையில்‌ வவளிக்கொணரக்‌ கதரிவு செய்வதன்‌ மூலம்‌ உருவாக்கப்புகிறது. “இப்பாடத்தில்‌ தாவரம்‌ பயிர்பெருக்க உத்திகளில்‌ சில. பாறம்பறிய முறைகளைக்‌ குறித்துக்‌ கலந்தாய்வு செய்வோம்‌.

தாவர அறிமுகம்‌ (Plant introduction)

வழக்கமாக வளருமிடத்திலிருந்து ஒரு தாவரக்கின்‌. மரபணுவிய திரகங்களைவேறாருபுதிய இடத்திலோ அல்லது. கழலிலோ அறிமுகப்படத்துவது. தாவர அறிமுகம்‌ எனப்ப. ஐ ரல்‌ இரகம்‌ பிலிப்பைன்ஸ்‌: நாப்டலிரந்து அறிமுகப்புத்தப்பட்டது.கோதுமை ‘இரகங்களான சோனாரா 63,சோனாரா 64 ஆகியவை க்சிகோ நாட்டிலிருந்து கறிமுகப்படு்கப்பட்டன.

புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட தாவரம் புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தகவமைத்துக் கொள்ளுதல் இணக்கமாதல் என்றழைக்கப்படும். அறிமுகப்படுத்தப்படும் அனைத்துத் தாவரங்களும் களைகளற்றும், பூச்சி மற்றும் நோயுண்டாக்கும் உயிரிகளற்றும் இருக்க வேண்டும். இதனைதொற்றுத் தடைக்காப்பு (quarantine) என்னும் முறையின் மூலம் மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். தொற்றுத் தடைக்காப்பு என்பது தொற்றுத்தன்மையுடைய நோய்கள் பரவாவண்ணம் தாவரங்களைத் தனிமைப்படுத்துவதாகும். அறிமுகப்படுத்துதல், முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை அறிமுகப்படுத்துதல் என வகைப்படுத்தப்படுகிறது.

  1. முதல்நிலை அறிமுகப்படுத்துதல்: அறிமுகப்படுத்தப்படும் தாவரம் மரபணு வகைய விகிதத்தில் எவ்வித மாறுபாடுறாமல் புதிய சூழ்நிலைக்கு தன்னைத் தகவமைத்துக் கொள்ளுதல்.
  2. இரண்டாம்நிலை அறிமுகப்படுத்துதல அறிமுகப்படுத்தப்படும் இரகமானது தே ர ்ந ்தெ டு த்த லு க் கு உட்படுத்தப்பட்டு அதிலிருந்து மேம்பட்ட இரகத்தை தனித்துப் பிரித்து, அதனுடன் உள்ளூர் இரகத்தைக் கலப்பு செய்து ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பண்புகளை அவற்றில் மாற்றுவதாகும். உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள தாவரவியல் தோட்டங்கள் தாவர அறிமுகப்படுத்துதலில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. சீனா மற்றும் வடகிழக்கு இந்தியப் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பல தேயிலை இரகங்கள் முதலில் கொல்கத்தாவிலுள்ள தாவரவியல் பூங்காவில் வளர்க்கப்பட்டன. பின் அவற்றிலிருந்து சரியான தேயிலை இரகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் பல பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.

தேர்வு செய்தல் (Selection)

கலந்த இனத் தொகையிலிருந்து ஒன்றோ அல்லது அதற்குமேற்பட்ட விரும்பத்தக்க பண்புகளை உடைய ஒரு சிறந்த தாவரத்தைத் தெரிவு செய்வதற்குத் தேர்ந்தெடுத்தல் (அ) தேர்வு செய்தல் என்று பெயர். தேர்வு செய்தல் என்பது தாவரப் பயிர்பெருக்கத்திலுள்ள மிகப் பழமையான மற்றும் அடிப்படை முறைகளில் ஒன்றாகும். தேர்வு செய்தல் இரண்டு வகைப்படும். i. இயற்கைத் தேர்வு (Natural selection): இது டார்வினின் பரிணாமக் கோட்பாடான தகுந்தன பிழைத்தல் என்ற இயற்கையிலேயே காணப்படும


தேசியத் தாவர மரபியல் வளத்துறை (Nation Bureau of Plant Genetic Resourse – NBPGR), இது நமது நாட்டிலுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பயிர் இரகங்களை அறிமுகப்படுத்திப் பராமரிக்கிறது. மேலும் தாவரவியல் மற்றும் மூலிகை சார்ந்த தாவரங்களையும், வன மரங்களையும், பாதுகாக்கும் ப�ொறுப்பிலும் இருக்கிறது. இதன் தலைமையகம் புதுதில்லியிலுள்ள இரங்கபுரி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது அமிர்தசரஸ், கொல்கத்தா, மும்பை, சென்னை (மீனம்பாக்கம்) ஆகிய நான்கு மண்டல நிலையங்களைக் கொண்டுள்ளது.

இயற்கைத் தேர்வு முறையாகும். இதில் விரும்பத்தகுந்த மாறுபாடுகளைக் கொண்ட தாவரத்தைப் பெற அதிக காலமாகும். ii. செயற்கைத் தேர்வு (Artificial selection): இது மனிதர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு வழிமுறையாகும். செயற்கைத் தேர்வு என்பது கலப்பினக் கூட்டத்திலிருந்து தனித்தன்மையுடைய தாவரங்களைத் தேர்ந்தெடுத்தலாகும். கீழ்கண்டவை செயற்கைத் தேர்வின் மூன்று முக்கிய வகைகளாகும். அ) கூட்டுத் தேர்வு (Mass selection): கூட்டுத்தேர்வில் அதிக எண்ணிக்கையிலுள்ள தாவரத் தொகையிலிருந்து ஒரே மாதிரியான புறத்தோற்ற விகிதம் அல்லது புறத்தோற்றப் பண்புகளைக் கொண்ட தாவரங்களைத் தேர்வு செய்து அவற்றின் விதைகளை ஒன்றாகக் கலந்து புதிய இரகத்தை உருவாக்குதலாகும். தேர்வு செய்யப்பட்ட தாவரங்களிலிருந்து பெறப்படும் சந்ததிகள் அவற்றின் தாவரத் தொகுதியை விடப் பெரும்பாலும் ஒரே மாதிரியாக உள்ளன.

![படம் 9.10: கூட்டுத்தேர்வும் தூயவரிசைத்தேர்வும ]

இவை தனித்தனியாகச் ச�ோதனை செய்யப்பட்டவை அல்ல. இத்தாவரங்கள் ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுத் தரமான விதைகள் பெருக்கம் செய்யப்படுகின்றன. பின் இவ்விதைகள் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. கூட்டுத்தேர்வு முறையிலுள்ள ஒரேயொரு குறை என்னவெனில் சூழ்நிலை மாறுபாடுகளால் ஏற்படும் மரபுவழி வேறுபாடுகளைப் பிரித்தரிய முடிவதில்லை. ஆ) தூயவரிசைத் தேர்வு (Pureline selection): தூயவரிசைத் தேர்வு என்ற ச�ொல் 1903-ஆம் ஆண்டு ஜோஹன்சன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது ஒத்த மரபுக்கூறுடைய தாவரத்தை மீண்டும் மீண்டும் தன்மகரந்தச்சேர்க்கை செய்து பெறப்படும் தாவரங்களாகும். எல்லா மரபுக்கூறுகளிலும் இவ்வாறு பெறப்பட்ட இரகமானது ஒரே சீர்தன்மையைக் கொண்டிருக்கிறது. இம்முறையிலுள்ள குறைபாடு என்னவெனில் புதிய மரபணுவகையம் கொண்ட தாவரங்களை உருவாக்க முடியாமல் ப�ோவதுடன் இவ்வகை இரகங்கள் குறைந்த தகவமைப்புகளோடும், சூழலியல் காரணிகளின் மாற்றங்களுக்கு ஏற

![படம் 9.11: நகல் தேர்வு]

நிலைக்கும் தன்மையைக் குறைவாகவும் கொண்டுள்ளன. இ) நகல் தேர்வு (Clonal selection): உடல இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களில் மைட்டாடிக் செல்பிரிதல் மூலம் உண்டான தாய் தாவரத்திலிருந்து ஒத்த பண்புகள் கொண்ட வழித்தோன்றல்கள் பெறப்படுகின்றன. கலப்பினத் தாவரத் தொகையிலிருந்து (நகல்கள்) புறத்தோற்ற விகிதத்தின் அடிப்படையில் மிகச்சிறந்த இரகத்தைத் தெரிவு செய்ய நகல் தேர்வு உட்படுத்தப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட தாவரங்கள் உடல இனப்பெருக்கத்தின் மூலம் பெருக்கமடையச் செய்யப்படுகின்றன. இந்த நகல் தாவரத்தின் மரபணு வகையம் நீண்ட காலத்திற்கு மாறாமல் அப்படியே இருக்கும்.

கலப்புறுத்தம் (Hybridization)

மரபணுவகையத்தில் வேறுபட்ட இரண்டிற்கு மேற்பட்ட தாவரங்களைக் கலப்புறச் செய்யும் முறைக்குக் கலப்புறுத்தம் என்று பெயர். இம்முறையில் தோன்றும் வழித்தோன்றலுக்குக் கலப்புயிரி (hybrid) என்று பெயர். தாவர மேம்பாட்டில் மற்ற பயிர்பெருக்க முறைகளைவிடக் கலப்புறுத்தம் மேம்பட்ட முறையாக உள்ளது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இரகச் சிற்றினங்களின் தகுந்த பண்புகளை இணைக்கப் பயன்படும் மிகச்சிறந்த வழிமுறையாகவும் உள்ளது. இயற்கையான கலப்புறுத்தம் நிகழ்வு முதன்முதலாகக் காட்டன் மேதர் என்பவரால் ச�ோளப்பயிரில் அறியப்பட்டது. கலப்புறுத்தலின் படிநிலைகள் (Steps in hybridization) கலப்புறுத்தலின் படிநிலைகள் கீழே தரப்பட்டுள்ளன.

  1. பெற்றோரைத் தேர்ந்தெடுத்தல்: தெரிவு செய்யப்பட்ட பண்புடைய ஆண் மற்றும் பெண் தாவரங்களைத் தேர்ந்தெடுத்தல். இத்தாவரங்களின் ஒத்தபண்பிணைவுத் தன்மையைச் ச�ோதனை செய்தல் மிக முக்கியமாகும். ![படம் 9.12 அ மற்றும் ஆ: ஆண் மலடாக்குதல் மற்றும் பையிடுதல் (மக்காச்சோளம்)]

  2. ஆண் மலடாக்குதல்: தன்-மகரந்தச்சேர்க்கையை தடுப்பதற்காக மகரந்தத் தாள்கள் முதிர்வதற்கு முன்னர் அவற்றை நீக்கும் முறை ஆணகச்சிதைவாகவும். இது ஆண் மலடாக்குதல் என்றழைக்கப்படுகிறது.

  3. பையிடுதல்: தேவையற்ற மகரந்தத்துகள்கள் சூலக முடியில் கலந்துவிடாமலிருக்க சூலக முடியை உறையிட்டுப் பாதுகாக்கும் முறை உறையிடுதல் அல்லது பையிடுதல் ஆகும்.

  4. கலப்பு செய்தல்: தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் மலரின் மகரந்தங்களை ஆண் மலடாக்கப்பட்ட பெண் மலரின் சூலக முடிக்கு மாற்றம் செய்வது கலப்பு செய்தல் எனப்படும்.

  5. விதைகளை அறுவடை செய்து புதிய தாவரங்களை உண்டாக்குதல்: மகரந்தச்சேர்க்கைக்குப் பிறகு கருவுறுதல் நடைபெற்று முடிவில் விதைகள் உண்டாகின்றன. இவ்விதைகளிலிருந்து உருவாகும் புதிய சந்ததிக்குக் கலப்புயிரி என்று பெயர். கலப்புறுத்தலின் வகைகள் தாவரங்களுக்கிடையே உள்ள உறவுமுறையை வைத்து கலப்புறுத்தல் கீழ்கண்ட வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. i. ஒரே இரகத்தினுள் கலப்புறுத்தம் (Intravarietal hybridization) - இதில் கலப்பு ஒரே இரகத் தாவரங்களுக்கிடையே நடைபெறுகிறது . இம்முறை தன்-மகரந்தச்சேர்க்கை நடைபெறும் தாவரங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும். ii. இரகங்களுக்கிடையே கலப்புறுத்தம் (Intervarietal hybridization) - இங்கு ஒரே சிற்றினத்தின் இருவேறு இரகங்களுக்கிடையே கலப்பு செய்யப்பட்டுக் கலப்புயிரி உருவாக்கப்படுகிறது. இது உட்சிற்றின கலப்புயிரித் தோற்றம் என்றும் அழைக்கப்படுகிறது. தன்-மகரந்தச்சேர்க்கை மற்றும் அயல்- மகரந்தச்சேர்க்கை அடையும் தாவரங்களை மேம்படுத்த இம்முறையே அடிப்படையாக உள்ளது. iii. சிற்றினங்களுக்கிடையே கலப்புறுத்தம் (Interspecific hybridization) - இது ஒரு பேரினத்தின் இரு வேறுபட்ட சிற்றினங்களுக்கிடையே கலப்பு செய்து கலப்புயிரியை உண்டாக்கும் முறையாகும். இது ப�ொதுவாக நோய், பூச்சி மற்றும் வறட்சியைத் தாங்கும் திறன் கொண்ட மரபணுக்களை ஒரு சிற்றினத்திலிருந்து மற்றொரு சிற்றினத்திற்கு மாற்றப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டு: காசிபியம்ஹிர்சுட்டம் x காசிபியம் ஆர்போரியம் - தேவிராஜ். ![படம் 9.13: மலர் (அ) கா. ஹிர்சுட்டம் (ஆ) கா. ஆர்போரியம்]

iv. பேரினங்களுக்கிடையேயான கலப்புறுத்தம் (Intergeneric hybridization): இது இருவேறுபட்ட பேரினத் தாவரங்களுக்கிடையே கலப்பு செய்து கலப்புயிரியை உண்டாக்கும் முறையாகும். இம்முறையின் குறைகளாவன கலப்புயிரி மலட்டுத்தன்மை, எடுத்துக்கொள்ளப்படும் நேரம், நடைமுறை செலவு ஆகியனவாகும். எடுத்துக்காட்டு: ரஃபானஸ் பிராசிகா, டிரிடிக்கேல். (இது பாடம் 3-ல் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது).

கலப்பின வீரியம் (Heterosis)

கலப்பின வீரியம் (ஹெட்டிரோ – மாறுபட்ட; சிஸ் - நிலை). 1912-ஆம் ஆண்டு ஹெட்டிரோசிஸ் என்ற ச�ொல்லை முதன்முதலில் பயன்படுத்திய அறிவியளாலர் G.H.ஷல் ஆவார். பெற்றோரைவிடக் கலப்புயிரி முதல் மகவுச்சந்ததியின் செயல்திறன் மேம்பட்டிருப்பதால் இது கலப்புயிரி வீரியம் (ஹெட்டிரோசிஸ்) என்றழைக்கப்படுகிறது. வீரியம் என்பது அதிக வளர்ச்சி, விளைச்சல், நோய் எதிர்க்கும் திறன், பூச்சியையும், வறட்சியையும் தாங்கி வளரும் திறனைக் குறிக்கும். கலப்பின வீரியத்தை மேம்படுத்த உடல வழி இனப்பெருக்கமே சிறந்ததாக உள்ளது. இதில் தெரிவு செய்யப்பட்டபண்புகள் சிதைவடையாமல் சில காலம் தொடர்கின்றன. இரண்டு பெற்றோருக்கிடையே உள்ள மரபிண வேறுபாட்டின் தன்மை கலப்பின வீரியத்தின் வீச்சுக்கு நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது என்பதைப் பெரும்பாலான கலப்புயிரியாளர்கள் நம்புகின்றனர். தோற்றம், புதிய சூழலுக்கு உகந்து ப�ோதல், இனப்பெருக்கத் திறன் ப�ோன்றவற்றைக் கருத்தில் கொண்டு கலப்பின வீரியம் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது. i) மெய்கலப்பினவீரியம் (Euheterosis): மெய்கலப்பினவீரியம் என்பது மரபு வழியாகப் பெறப்படும் கலப்பு வீரியமாகும். மேலும் இது கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது. அ. சடுதிமாற்ற மெய்கலப்பின வீரியம் (Mutational Euheterosis) - இது மெய்கலப்பினவீரிய வகைகளில் மிக எளிமையானது. அயல்-மகரந்தச்சேர்க்கை நடைபெறக்கூடிய பயிர்களில் மேம்பட்ட ஓங்கிய அல்லீல்கள் மூலம் தேவையற்ற, கேடுவிளைவிக்கக்கூடிய, கொல்லும் ஒடுங்குப்பண்புடைய அல்லது சடுதிமாற்றம் பெற்ற மரபணுக்களை நீக்குவதன் மூலம் ஏற்படுகிறது. ஆ. சமநிலை மெய்கலப்பினவீரியம் (Balanced Euheterosis) இவை வேளாண்மைக்கு உதவும் வகையில் பல சூழ்நிலைக் காரணிகளுக்கேற்பத் தகவமைத்துக் கொள்ளும் சமநிலை பெற்ற மரபணு இணைப்பு, சமநிலை மெய்கலப்பினவீரியமாகும். ii) ப ொய்கலப்பினவீரியம் (Psuedoheterosis): சந்ததி தாவரமானது உடல வளர்ச்சியில் பெற்றோர் தாவரங்களை விட மேம்பட்டும் ஆனால் விளைச்சலிலும், தகவமைப்பிலும், மலட்டுத்தன்மையுடனோ அல்லது குறைந்தளவு வளமானதாகவோ காணப்படுகிறது. இது உடலவளவீரியம் என்றும் அழைக்கப்படும்.

சடுதி மாற்றப் பயிர்பெருக்கம் (Mutation breeding)

முல்லர் மற்றும் ஸ்டேட்லர் (1927 - 1928) சடுதிமாற்ற பயிர் பெருக்கம் என்ற ச�ொல்லை உருவாக்கினார்கள். இது மரபுவழிப் பயிர்பெருக்க உத்திகளில் மேற்கொள்ளப்படும் புதிய வழிமுறையைக் குறிக்கிறது. இது மரபுவழிமுறைகளிலுள்ள குறைபாடுகளை உழவியல் மற்றும் பயிரின் தரப்பண்புகளை மேம்படுத்தும் முறையாகும். ஒரு உயிரினத்தின் மரபணுவகையத்திலோ அல்லது புறத்தோற்ற வகையத்திலோ திடீரென மரபுவழியாக ஏற்படும் மாற்றம் சடுதி மாற்றம் எனப்படும். மரபணு சடுதிமாற்றம் பயிர்பெருக்கத்தில் மிக அவசியமானதாகும். ஏனெனில் இவை பரிணாமம், மறுசேர்க்கை, தேர்ந்தெடுத்தல் ப�ோன்றவற்றிற்கு இடுப�ொருட்களைத் தருவதால் இது முக்கியமானதாக விளங்குகிறது. இது விதையிலாப் பயிர்களை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரே வழிமுறையாகும். புறஊதாக் கதிர்கள், எக்ஸ் கதிர்கள், ஆல்ஃபா, பீட்டா, காமா ப�ோன்ற கதிர்வீச்சுகளைக் கொண்டும், சீசியம், இதைல் மீத்தேன் சல்போனேட் (EMS), யூரியா ப�ோன்ற காரணிகள் புதிய இரகப் பயிரை உருவாக்குவதற்கான சடுதி மாற்றத்தைத் தூண்டுகின்றன. எடுத்துக்காட்டு: அதிக விளைச்சலையும், உயரத்தையும் கொண்ட மூன்று மரபணு கொண்ட குட்டை இரகக் கோதுமை. உவர்தன்மை மற்றும் பூச்சி எதிர்ப்புத்தன்மை கொண்ட அடோமிடா 2 (Atomita 2) அரிசி இரகம்.

காமா தோட்டம் அல்லது அணுத்தோட்டம்: கோபால்ட் 60 அல்லது சீசியம் 137 ப�ோன்ற க தி ர் வீச்சு களை ப் பயன்படுத்தித் தகுந்த சடுதி மாற்றங்களைப் பயிர் தாவரங்களில் உண்டாக்கும் ஒரு வழிமுறையாகும். இந்தியாவில் முதல் காமாத் தோட்டம் கொல்கத்தாவில் உள்ள ப�ோஸ் ஆய்வு நிறுவனத்தில் 1959-லும், இரண்டாவது தோட்டம் வேளாண் ஆய்வு நிறுவனத்தில் 1960-லும் ஆரம்பிக்கப்பட்டு, அவற்றின் மூலம் பல மரபுவழி வேறுபாடுகள் கொண்ட பயிர்கள் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டன

பன்மடிய பயிர்பெருக்கம் (Polyploid breeding)

பெரும்பாலான பூக்கும் தாவரங்கள் இருமடியம் (2n) கொண்டவை, இரண்டிற்கும் மேற்பட்ட குரோமோச�ோம் தொகுப்புகளைக் கொண்ட அல்லது பெற்ற தாவரங்கள் பன்மடியங்கள் என்றழைக்கப்படுகின்றன. காட்டுத் தாவரங்கள் மற்றும் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்படும் தாவரங்களின் பரிணாமத்தில் பன்மடியம் மிக முக்கிய அங்கமாக விளங்குகிறது. கலப்பின வீரியம் மாறுபட்ட பண்பிணைவுதன்மை, உயிர் மற்றும் உயிரற்ற காரணிகளின் இறுக்கத்தைத் தாங்கும் திறன், தீங்கு விளைவிக்ககூடிய சடுதிமாற்றத்தினை தாங்கும் திறனுடைய தாவரங்களைப் பன்மடியம் அடிக்கடி வெளிப்படுத்துகிறது. மேலும் பன்மடியம் குன்றல்பகுப்புக் குறைப்பாட்டால் குறைந்த வளத்தன்மையுடைய விதையற்ற இரகங்கள் உருவாவதற்கும் வழிவகுக்கிறது. தன்பன்மடியமாதல் (autopolyploidy) என்பது ஒரு தாவரத்திலுள்ள குரோமோச�ோம்கள் தானாகவே இரட்டிப்புறுதலை குறிக்கிறது. எடுத்துக்காட்டு: பீட்ருட், ஆப்பிள், ப�ோன்றவற்றின் மும்மய பன்மடிய நிலையானது வீரியத்தையும், கனி, வேர், இலை, மலர் ப�ோன்றவற்றின் அளவை பெரிதாகவும், அதிக அளவு கனிகளின் எண்ணிக்கை மற்றும் சர்க்கரையின் அளவையும் அதிகரிக்கின்றன. இம்முறை விதையில்லாத் தக்காளி, ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி தாவரங்களையும் உருவாக்கியிருக்கிறது. கால்சிசினை பயன்படுத்திக் குரோமோச�ோம் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கத் தூண்டுவதன் மூலம் பன்மடியத்தை ஏற்படுத்தலாம். அயல்பன்மடியம் (Allopolyploidy) என்பது வேறுபட்ட இரண்டு சிற்றினங்களிலிருந்து பெறப்பட்ட குரோமோச�ோம் தொகுதிகளைப் பெருக்கமடையச் செய்யும் முறையாகும். எடுத்துக்காட்டு: டிரிட்டிகேல் (டிரிடிகம் டுரம் x சீகேல் சீரியல்), ரஃபனோ பிராசிகா (பிராசிகா ஒலரேசியா x ரஃபானஸ் சட்டைவஸ்). ### பசுமை புரட்சி (Green revolution) பசுமை புரட்சி என்ற ச�ொல் வில்லியம் S. காட் (1968) என்பவரால் உருவாக்கப்பட்டது. தொடர் ஆய்வுகள், முன்னேற்றங்கள், புதுமைகள், தொழில்நுட்பப் பரிமாற்றங்களுக்கான முயற்சிகள் ப�ோன்றவற்றின் ஒருமித்த விளைவே பசுமைப்புரட்சி என வரையறுக்கப்படுகிறது. 1940 முதல் 1960-ன் பிற்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் உலகம் முழுவதிலும், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் கோதுமை, அரிசி ப�ோன்ற வேளாண் ப�ொருட்களின் உற்பத்தியைப் பன்மடங்கு உயர்த்தியது. வளரும் நாடுகளில் வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்காக உயர் விளைச்சல் தரும் தாங்கு திறன் கொண்ட இரகங்களை அறிமுகப்படுத்துவதும், நீர் மற்றும் உரப் பயன்பாட்டு முறைகளும், வேளாண் மேலாண்மையை மேம்படுத்தத் தீவிர திட்டமிட்டு 1960-களில் உருவாக்கப்பட்டது பசுமை புரட்சி அல்லது மூன்றாம் வேளாண் புரட்சி எனப்படுகிறது.

1963-ஆம் ஆண்டு மெக்சிகோவிலிருந்து அரை குட்டைத்தன்மையுடைய கோதுமை இரகம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் உயர் வீளைச்சல் தரும் ச�ோனாரா 64, ச�ோனாலிகா, கல்யாண் ச�ோனா ப�ோன்ற பல கோதுமை இரகங்களைப் பயிர்பெருக்கம் செய்வதற்காக ஐந்து நீண்ட காலத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இத்தகைய இரகங்கள் பரவலான உயிரி மற்றும் உயிரற்ற காரணிகளைத் தாங்கும் திறன் கொண்டவை. கோதுமையப் ப�ோன்றே, உரமேற்கும் திறன் கொண்ட TN 1 (டாய்சிங் நேட்டிவ் 1) என்கின்ற முதல் அரை குட்டைக்கலப்பின நெல் இரகத்தை 1956-ல் தாய்வானில் Dr.M.S. சுவாமிநாதன் அவர்கள் உருவாக்கினார். இதன் வழி தோன்றல்கள் 1966 -ல் அறிமுகப்படுத்தப்பட்டன. பிறகு சிறந்த விளைச்சல் தரும் அரைக்குட்டை நெல் இரகமான ஜெயா மற்றும் ரத்னாவை இந்தியாவில் உருவாக்கினார்.


நோரின் 10: நோரின் 10 என்ற குட்டை மரபணு கொண்ட இரகங்கள் இலையின் ஒவ்வொரு அலகுப் பகுதியில் அதிகளவு ஒளிச்சேர்க்கை திறனையும், அதிகச் சுவாசச்செயலையும் கொண்டிருந்தன. 1935-ல் கான்ஜிரா இனாசுகா என்பவர் தேர்ந்தெடுத்த அரைக்குட்டை கோதுமை இரகம் பின்னர் நோரின் 10 இரகமாக ஆனது. இவர் அரைக்குட்டை மரபணுக்கள் உலகில் கோதுமை விளைச்சலில் புரட்சியை ஏற்படுத்துவதோடு பல கோடி மக்களின் பசியையும், பட்டினியையும் ப�ோக்கும் என்பதை அப்பொழுது நினைத்திருக்கமாட்

கரும்பு: சக்காரம் பார்பெரியானது ப�ொதுவாக வட இந்தியாவில் வளரும் குறைந்த இனிப்புத் திறனையும், விளைச்சலையும் கொண்ட தாவரமாகும். தென் இந்தியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் வளரும் சக்காரம் அஃபிசினாரமானது தடிமனான தண்டையும், அதிகளவு இனிப்புத் திறனையும் கொண்டது. ஆனால் இது வட இந்தியாவில் சரியாக வளர்வதில்லை. இந்த இரு சிற்றினங்களையும் கலப்பு செய்து அதிக வளர்ச்சி, தடித்த தண்டு, அதிக இனிப்புத்திறன் மற்றும் வட இந்தியாவில் வளரும் திறன் கொண்ட கரும்பு இரகங்கள் பெறப்பட்டன. பயிர் பெருக்கம் மூலம் ந�ோய் எதிர்க்கும் திறன் கொண்ட தாவரங்களை உருவாக்குதல் பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களை எதிர்க்கும் திறன்கொண்ட சில பயிர் இரகங்களைக் கலப்பு செய்தல் மற்றும் தேர்ந்தெடுத்தல் முறை மூலம் உருவாக்கி வெளியிடப்பட்டது (காண்க அட்டவனை 9.1) ![அட்டவணை 9.1: நோய் எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்கள] வெண்டை தாவரத்தின் மஞ்சள் தேமல் வைரஸ் நோயை எதிர்க்கும் திறனானது காட்டுச் சிற்றினத்திலிருந்து பெறப்பட்டு ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ் என்ற ஒரு புதிய இரகமாக உருவானது. இது பர்பராணி கிராந்தி என்றழைக்கப்படுகிறது. பயிர்பெருக்கத்தின் மூலம் பூச்சி எதிர்க்கும் திறன் கொண்ட தாவரங்களை உருவாக்குதல்: ஓம்புயிரித் தாவரங்களின் பூச்சி எதிர்க்கும் திறனானது புறத்தோற்றம், உயிரிவேதியியல், உடற்செயலியல் ப�ோன்ற பண்புளைக் கொண்டு அமையலாம் பல தாவரங்களில் தூவிகளுடைய இலைகள் பூச்சி எதிர்க்கும் திறனுடன் தொடர்புடையதாக உள்ளன. எடுத்துக்காட்டு: பருத்தியின் இலைத்தத்துப்பூச்சி எதிர்ப்புத்திறன் மற்றும் கோதுமையின் தானிய இலைவண்டு எதிர்ப்புத் திறன், திடமான தண்டுகள் கொண்ட கோதுமை இரம்பப்பூச்சியால் விரும்பப்படுவதில்லை. மிருதுவான இலை மற்றும் பூத்தேன்(Nectar) அற்ற பருத்தி இரகங்கள் காய்ப்புழுக்களை (bollworms) தன்பால் ஈர்ப்பதில்லை. அதிக அஸ்பார்டிக் அமிலம், குறைந்த நைட்ரஜன் மற்றறும் சர்க்கரை கொண்ட ச�ோளங்கள் ச�ோளத்தண்டு துளைப்பானுக்கு எதிர்ப்புத் திறனைப் பெற்றுள்ளன. ![அட்டவணை 9.2: பூச்சி எதிர்க்கும் இரகங்கள]

நவீனதாவரப் பயிர்ப்பெருக்க தொழில்நுட்பம் (Modern plant breeding)

பயிர்ப் பெருக்க முறைகளில் முக்கிய நிகழ்வுகளான மரபணுப�ொறியியல், தாவரத் திசு வளர்ப்பு, புரோட்டோபிளாச இணைவு அல்லது உடல இணைவு முறை, மூலக்கூறு குறிப்பு மற்றும் DNA விரல் பதிவு (molecular marking and DNA finger printing) ப�ோன்ற சில நவீன பயிர்ப்பெருக்க முறைகளைப் பயன்படுத்தி உயர்ரகப் பயிர்கள் பெறப்படுகின்றன. மேலே குறிப்பிட்ட கருத்திற்கான பல்வேறு தொழில்நுட்பங்களையும், பயன்பாடுகளையும் ஏற்கனவே அலகு VIII-ல் படித்துள்ளோம். புதிய தாவரப் ப ொறியியல்தொழில்நுட்ப முறைகள் (New Plant Engineering Techniques) / புதிய பயிர் பெருக்கத் தொழில்நுட்ப முறைகள் (NBT) (New Breeding Techniques) NBT என்பது தாவரப் பயிர்ப் பெருக்கத்தில் புதிய பண்புகளை வளர்க்கவும், வேகப்படுத்தவும் பயன்படுத்தும் வழிமுறையாகும். தாவரங்களுக்குள்ளேயே DNAவின் குறிப்பிட்ட இடங்களை மரபணு தொகைய திருத்தம் (Genome editing) மூலம் DNA -வை குறிப்பிட்ட இடங்களில் மாற்றிப் புதிய பண்புக்கூறுகளையுடைய பயிர்த் தாவரங்களை உருவாக்கும் முறைகளாகும். பண்புக்கூறுகளில் பல்வேறு மாறுதல்களைச்செய்யப் பயன்படும் படிநிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: • மரபணு தொகையத்தை வெட்டுதல் மற்றும் மாற்றியமைத்தலை CRISPR / Cas ப�ோன்ற முறைகள் செய்கின்றன. • மரபணு தொகைய திருத்தம் – ஆலிகோ நியூக்ளியோடைடு இயக்கத் திடீர் மாற்றக் காரணி (ODM) என்ற நுட்பத்தின் மூலம் சில இணை காரங்களில் மாற்றங்களைச் செய்தல். • ஒரே சிற்றினம் அல்லது நெருங்கிய தொடர்புடைய சிற்றினத்திற்குள் மரபணுக்கள் மாற்றப்படுவது. (cisgenesis)


நார்மன் E. போர்லாக்: நார்மன் E. ப�ோர்லாக் என்பவர் தாவர நோயியலாளர் மற்றும் பயிர்பெருக்க வல்லுநராவார். இவர் மெக்சிகோவிலுள்ள ச�ோனார்ட் என்ற இடத்திலுள்ள பன்னாட்டு ச�ோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு ![pic] நிறுவனத்தில் தன் வாழ்நாளைக் கழித்தார். உலகின் பல நாடுகளில் தற்போது பயிரிடப்படும் நோரின் 10, ச�ோனாரா 64, லெர்மா ரோஜா 64 ப�ோன்ற புதிய உயர் விளைச்சல் மற்றும் துரு நோய் தாங்குத்திறன் கொண்ட, சாயாத, புதிய கோதுமை ரகங்களை இவர் உருவாக்கினார். இதுவே பசுமைப்புரட்சிக்கு அடிப்படையாக விளங்கியது. இவருக்கு 1970-ல் அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது. Dr. M.S. சுவாமிநாதன்: இவர் சடுதிமாற்றப் பயிர்பெருக்கத்தின் முன்னோடியாவார். இவர் சடுதி மாற்ற முறை மூலம், ப�ொன்னிறமுடைய ஷர்பதி ச�ோனாரா என்ற கோதுமை இரகத்தை உருவாக்கினார். இது இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு ![pic] வழிகோலியது. இவர் இந்தியப் பசுமைப்புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். நெல் ஜெயராமன்: இவர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆதிரங்கம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர். இவர் Dr. நம்மாழ்வார் அவர்களின் சீடராவார். இவர் “நமது நெல்லைப் பாதுகாப்போம் இயக்கத்தின்” தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். இவர் பாரம்பரிய நெல் இரகங்களைப் பாதுகாப்பதில் அயராது பாடுபட்டவர். இவர் விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்து அவர்களின் நிலங்களில் ஏற்படும் பாதிப்புகளைக் குறித்துக்கொண்டு அவற்றிற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். 2006-ஆம் ஆண்டு முதன்முதலில், இவர் தனது பண்ணையில் தனியொருவராக “நெல் திருவிழாவை” நடத்தினார். 10-வது திருவிழாவானது 2016-ல் ஆதிரங்கம் என்ற அவருடைய ![ pic] கிராமத்திலேயே நடைபெற்றது. இத்திருவிழ ா வி ல் தமிழ்நாட்டிலுள்ள 7000-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 174 வகையான பாரம்பரிய நெல் இரகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தில் (IRRI) உரையாற்றுவதற்காகப் பிலிப்பைன்ஸ் அரசு இவரை அழைத்தது. 2011-ஆம் ஆண்டு இவர் சிறந்த இயற்கை விவசாயத்திற்கான மாநில விருதைப் பெற்றார். 2015-ம் ஆண்டு சிறந்த மரபணு பாதுகாப்பாளர் என்ற தேசிய விருதையும் பெற்றார்

• DNA வை மாற்றம் செய்யாமல் அதற்குள் இருக்கும் மரபணுவின் செயல்பாடுகளை ஒருங்கமைக்கும் முறை (epigenetic methods)

விதை பாதுகாப்பு

வேளாண் சமூக வாழ்வாதாரத்தில் முக்கியக் கூறுகளில் ஒன்றாக விளங்குவது விதை. விதை பலகாலமாக மேம்படுத்துதல் மற்றும் தேர்ந்தெடுத்தல் மூலம் உண்டான பயிர் சிற்றினங்கள் மற்றும் அதன் இரகங்களின் மரபின விவரத்தின் உறைவிடமாக உள்ளது. பயிர் உற்பத்தி, உணவு பாதுகாப்பு ப�ோன்றவற்றில் விதைகளின் பங்கு அபரிமிதமாக உள்ளது. பயிர்பாதுகாப்பு ப�ொருட்களைப் பயிர் வளர்ச்சியின்போது அளித்தும் அல்லது விதைகளுடன் சேர்த்தும் தரலாம். வளமான பயிர்களை மேம்படுத்துவதில் விதைபாதுகாப்பானது மிக முக்கியப் பங்காற்றுகிறது. விதை பாதுகாப்பு மற்றும் சேமிப்பு முறைகளைப் பாரம்பரியம் மற்றும் நவீன முறைகள் மூலம் செய்யலாம்.

பாரம்பரிய விதை பாதுகாப்பு முறைகள்

• குறுகிய காலச் சேமிப்பிற்கு விதைகளுக்கு நுண்ணிய செம்மண், குண்டூர் மிளகாய் ப�ொடி, வேப்பிலை ப�ொடியாலும் பாகற்காய் ப�ொடியாலும், முருங்கைக்காய்ச் சாறு மற்றும் புங்கை இலைச் சாறு ப�ோன்றவை பாரம்பரியமாக விதைப்பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. • நெல்விதைகளை 1:10 என்ற விகிதத்தில் தயாரிக்கப்பட்ட உப்புநீரில் ஊறவைத்து, அதில் மிதக்கும் பதர்களை நீக்கி நிழலில் உலர்த்தி ஒன்று முதல் இரண்டாண்டுகள் வரை சேமிக்கப்படுகிறது. • ச�ோள விதைகள் சுண்ணாம்பு நீரில் (1 கி சுண்ணாம்பு + 10 லி நீர்) பத்து நாட்கள் ஊறவைத்து அலசிப் பின்னர் உலர்த்திச் சேமித்து வைக்கப்படுகிறது. • கொண்டைக்கடலை விதைகள் எலுமிச்சை இலை எண்ணெய், பருத்தி விதைஎண்ணெய், ச�ோயா எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் (100 கிலோ விதைக்கு 500 மி.லி எண்ணெய்) ஆகிய எண்ணெய்க் கலவையில் கலந்து சேமித்து வைக்கப்படுகிறது. • சூரியகாந்தி விதைகள் உலர்ந்த விதை நீக்கப்பட்ட பீர்க்கங்காயின் உள்ளே வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. இக்காய்கள் காற்று புகாத கலன்களில் சேமித்து வைக்கப்படுகிறது.

நவீன விதை பாதுகாப்பு முறைகள்

விதை பாதுகாத்திலுள்ள பல்வேறு முறைகள் கீழே தரப்பட்டுள்ளன

  1. விதை நேர்த்தி வேளாண்மையிலும், தோட்டக்கலைத் துறையிலும் விதை நேர்த்தியானது வேதிப்பொருட்களைக் கொண்டு முக்கியமாக எதிர்நுண்ணுயிரி அல்லது பூஞ்சைக்கொல்லிகளை நடவுக்கு முன் இட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.

விதைநேர்த்தியின் பயன்கள் • தாவரங்களில் நோய்கள் பரவுவதைத் தடுக்கிறது. • நாற்றுக் கருகளிலிருந்து விதைகளைப் பாதுகாக்கிறது. • முளைப்புத் திறனை மேம்படுத்துகிறது. • சேமித்து வைத்திருக்கும் தானியங்களைப் பூச்சிகள் தாக்காமல் பாதுகாக்கிறது. • மண்ணிலுள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. 2. கடினமாக்கல் விதை நேர்த்தி கடினமாக்கல் விதை நேர்த்தி என்பது விதையின் உடற்செயலியலை உயர்த்துவதாகும். அதாவது, விதையை நீரிலோ அல்லது சரியான விகிதத்தில் கலந்த வேதியியல் கரைசலிலோ குறிப்பிட்ட காலத்திற்கு ஊறவைக்க வேண்டும். பின் இந்த விதைகள் தனது சரியான ஈரப்பதத்திற்குத் திரும்பும் வகையில் நிழலில் உலர்த்த வேண்டும் கடினமாக்கல் விதை நேர்த்தியின் பயன்கள் • விளைச்சல், வேர் வளர்ச்சி, முளைப்புத்திறன் வீரியம் ப�ோன்றவற்றை உயர்த்துகிறது. • நாற்றுகளைச் சீரான முறையில் முளைக்கச் செய்கிறது. • பூக்கும் பருவத்தை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னரே எய்தச் செய்கிறது. • சீரான விதை உற்பத்தி மற்றும் முதிர்ச்சியை உண்டாக்குகிறது. • வறட்சியைத் தாங்கும் திறனை விதைகளுக்கு அளிக்கிறது. 3. விதை உருண்டைகள் வடிதன்மை அற்ற மந்தப் ப�ொருட்களைப் பசையின் உதவியுடன் உயிர்செயல் வேதிப்பொருட்களையும் சேர்த்து விதையைச் சுற்றிப் பூசி உருண்டைகளாக்குவதற்கு விதை உருண்டைகள் என்று பெயர். இம்முறையில் விதைகளின் எடை, அளவு, வடிவம் ப�ோன்றவை அதிகரிக்கின்றன. 4. விதைபூச்சு விதைபூச்சு என்பது விதையை எருவிலோ, வளர்ச்சி ஊக்கிகளைக் கொண்டோ, ரைச�ோபியம் காரணிப்பொருள், ஊட்டச்சத்து ப�ொருள், எதிர்க்கும் ப�ொருள், வேதிப்பொருள், பூச்சிக் கொல்லிகள் ப�ோன்ற ப�ொருட்களைக் கொண்டு அடர்த்தியாக விதையின் மேல் பூசுவதாகும். விதைகளின் மேல் பசையின் மூலம் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் விதையின் முளைப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கின்றன. 5.விதைகளுக்கான உயிரி திணிப்பு இது விதைகளை உயிரியல் முறை மூலம் நேர்த்தி செய்தலாகும். இது விதைகளை நீருட்டம் செய்தல் (Physiological aspect of disease control and Innoculation – உயிரியல் சார்ந்த நோய்த்தடுப்பு மற்றும் உட்புகுட்டல்) மற்றும் நன்மை தரும் உயிரிகளை விதைகளில் உட்புகுத்துதல் ப�ோன்றவைகள் மூலம் விதைகளைப் பாதுகாக்கும் முறையாகும். இது மண் மற்றும் விதை சார்ந்தநோயுயிரிகளுக்கு எதிராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பூஞ்சை எதிரிகளைப் பயன்படுத்தும் சூழல் சார்ந்த அணுகுமுறையாகும். இவ்வகையான நேர்த்தி முறை வேதியியல் தடுப்பு முறைகளுக்கு ஒரு மாற்றாக அமைகிறது.

விதை சேமிப்பு

விதையானது வாழ்வியல் முதிர்ச்சியடைந்தவுடன் சேமிப்பானது தாய்த் தாவரத்திலேயே தொடங்குகிறது. விதை சேகரித்த நாளிலிருந்து விதைக்கும் காலம் வரை அதன் முளைதிறனோடு பாதுகாப்பது விதைச் சேமிப்பு எனப்படும். அறுவடைக்குப் பின் விதைகள் பண்டகசாலையிலோ ப�ோக்குவரத்தின் இடைப்பட்ட இடங்களிலோ, சில்லரைக் கடைகளிலோ சேமித்து வைக்கப்படுகின்றன.

சேமிப்புகளின் அடிப்படையில் விதைகளின் வகைப்பாடு

![pic]

விதைசேமிப்பு முறைகள்

i. பாரம்பரிய விதை சேமிப்பு முறைகள் பாரம்பரிய விதை சேமிப்பு முறை மூங்கில் அமைப்புகளிலும், மட்பாண்டங்களிலும், மர அமைப்புகளிலும் மற்றும் பூமிக்குள் சேமித்து வைக்கும் முறைகளையும் உள்ளடக்கியுள்ளது. கிராமங்களில் அதிக விதைகளைச் சிமெண்ட் உறைகளிலும், உலோக உருளைகளிலும், நெகிழி உருளைகளிலும் சேமித்து வைத்தனர். நகர்புறங்களில் விதை சேமித்தலுக்குத் தார் உருளை, உதைப்பூர் உருளை, மூங்கில் உருளை, பூசா உருளை மற்றும் உலோக உருளைகளைப் பயன்படுத்துகின்றனர். ii. நவீன விதை சேமிப்பு முறைகள் அ) குளிர்பாதுகாப்பு முறையில் சேமித்தல் (Seed storage in cryopreservation): இது மரபணு வளக்கூறுகளை (germplasm) (செல்கள், திசுக்கள், கரு, விதைகள்) உறைநிலைக்கு மிகவும் கீழான திரவ நைட்ரஜனில் -1960 C க்கும் கீழ்க் குளிர்நிலையில் வைத்து பாதுகாக்கும் தொழில்நுட்ப முறையாகும். வணிக விதைசேமிப்பிற்கு இம்முறை பயன்படாது. இருப்பினும் இம்முறை பாரம்பரிய முறைகளால் பாதுகாக்கமுடியாத மதிப்புமிக்க மரபணு வளக்கூறுகளை எதிர்காலத்தேவைக்காகச் சேமித்து வைக்கப் பயன்படுகிறது. ஆ) மரபணு வங்கி விதை சேமிப்பு: மரபணு வங்கியில் விதை சேமிப்பது என்பது ஒரு முறையான கட்டுப்படுத்தபட்ட சூழலில் பாதுகாக்கப்படுவதாகும். இம்முறையில் வெப்பம், காற்று மற்றும் விதையின் ஈரப்பதம் ப�ோன்றவற்றால் விதையின் முளைப்புத் திறன் பாதிக்காதவாறு மிக நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கப்படுகிறது. இம்முறையில் ஒவ்வொரு வகை விதைக்கும் கொள்கலன் மற்றும் சேமிக்கும் முறைகள் மாறுபடுகின்றன. இ) சுவல்பார்ட் விதை வங்கி: விதைகள் நான்கடுக்கு மூடிய உறைகளில் இடப்பட்டுப் பின்னர் அவை அடர்ந்த திடமான நெகிழி க ொ ள ்க ல ன ்க ளி ல் வைக்கப்பட்டு, உலோக அலம ா ரி க ளி ல் அ டு க ்க ப்ப டு கி ற து . ![படம் 9.14: சுவல்பார்ட் விதை வங்க] இவ்விதை சேமிப்பு அறைகள் -180C வெப்ப நி லை யி ல் வைக்கப்படுகின்றன. கு ற ை ந்த வெப்ப நி லை யு ம் வரையறுக்கப்பட்ட ஆக்ஸிஜனும் விதையின் வளர்சிதை மாற்றத்தையும், வயதாவதைத் தள்ளிப்போடுவதையும் உறுதி செய்கின்றன. மின்சாரம் தடைபடும்பொழுது விதைகளுக்குத் தேவையான குறைந்த வெப்பநிலையைக் கொள்கலனைச் சுற்றியுள்ள நிலத்தடி உறைபனியானது வழங்குகிறது.

விதைச்சான்று

தரக்கட்டுப்பாட்டுடன்கூடிய விதைப் பெருக்கம் மற்றும் உற்பத்திக்கான சட்டபூர்வமான அல்லது சட்டமயமான முறைமையே விதைச்சான்றாகும். விதைகளைப் பராமரித்து அவற்றைப் ப�ொதுமக்களுக்கு அளிப்பதே இத்தரச்சான்றின் நோக்கமாகும். மரபு அடையாளத்துடன் கூடிய கலப்படமற்ற பட்டியலிடப்பட்ட இரகங்களைத் தரம் வாய்ந்த விதைகள் மற்றும் பெருக்கத்திற்கான ப�ொருட்கள் மூலம் வளர்த்து விநியோகிக்க இத்தரச்சான்று முறை பயன்படுகிறத

வே ள ா ண ்மை யி ல் நானோதொழில்நுட்பம் தற்காலத்தில் ந ானோத ொழில்நுட ்ப ம் பல்வேறு நுண்கருவிகளையும் நுண்பொருட்களையும் அளிப்பதன் மூலம் வேளாண்மையில் ஒரு தனித்த பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டு: நுண் – உயிரி – உணர்விகள் மூலம் மண்ணின் ஈரப்பதத்தையும் ஊட்டச்சத்தின் நிறையையும் கண்டறியலாம். திறன் வாய்ந்த ஊட்டச்சத்து வேளாண்மைக்கான நுண்உரங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட களைகளைக் கட்டுப்படுத்தும் நுண்களைக்கொல்லிகள், விதை வீரியத்தை அதிகப்படுத்தும் நுண் ஊட்டச்சத்துக்கள், திறன் வாய்ந்த பூச்சி மேலாண்மைக்காக நுண்பூச்சிக் கொல்லிகள் போன்றவற்றின் நுண்தொழில்நுட்பம் மூலம் பெறலாம். எனவே நானோதொழில்நுட்பம் சூழல் பாதுகாப்பு, சூழல் நீள்நிலைத்தன்மை, பொருளாதார நிலைத்தன்மை போன்றவற்றின் மூலம் பயிர் விளைச்சலில் பெரும் பங்கு வகிக்கிறது.

பாடச்சுருக்கம் பொருளாதாரத தாவரவியல் என்பது மனிதர்களுக்கும் பொருளாதாரதப் பயன்தரும் தாவரங்களுக்கும் இடையேயுள்ள உறைவைக் குறிக்கிறது. இது மனிதர்களின் மூன்று முக்கியத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ப�ோன்றவற்றை நிறைவு செய்கிறது. வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்படும் பயிர்கள் (சாகுபடி பயிர்கள்) பல சிக்கலான செயல்முறைகளுக்குப் பிறகே கொண்டுவரப்படுகின்றன. அதாவது தாவரங்களில் ஏற்படும் மரபணுவிய வேறுபாடுகள் திடீரென ஒரு நாள் தோன்றுவதில்லை. மாறாக, அதிகக் காலம் அதாவது சில சிற்றினங்கள் உருவாகப் பலநூறு ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும். வேளாண்மையின் வரலாற்றில் வாவிலோ என்பவர் முதலில் எட்டுத்தாவரத் தோற்றமையங்களைக் கூறினார். தற்பொழுது அது பன்னிரெண்டு மையங்களாகப் பிரிந்துள்ளது. இயற்கை வேளாண்மையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நுண்ணுயிரி உட்செலுத்திகளைக் கொண்ட உயிரி உரங்கள் வேதிய உரங்களைக் காட்டிலும் செலவுடையதா இருந்தாலும் பயன்படுத்தப்படுகிறது. அச�ோலா, ஆர்பஸ்குலார் வேர் பூஞ்சை மற்றும் கடல்களைகள் உரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை பயிர் விளைச்சலை அதிகரிக்கின்றன. பயிர்பெருக்கம் என்பது மனிதத்தேவைக்காகத் தாவரச் சிற்றினங்களைக் குறிக்கோளுடன் திறமையாகக் கையாண்டு குறிப்பிட்ட விரும்பத்தக்க மரபணு வகையத்தையும் மற்றும் புறத்தோற்ற வகையத்தையும் உருவாக்குவதாகும். தாவர அறிமுகம், தேர்ந்தெடுத்தல், கலப்பு செய்தல், கலப்பின வீரியம், சடுதிமாற்ற பெருக்கம், பன்மடிய பெருக்கம் மற்றும் பசுமை புரட்சி ப�ோன்றவை பாரம்பரியப் பயிர்பெருக்க முறைகளாகும். விதையானது தாவரத்தின் மிக முக்கியபாகமாகும். எதிர்காலச் சந்ததிக்கு உணவை அளிப்பதும் விதையாகும். எனவே இதை மிகக் கவனமாகப்பாதுகாத்துச் சேமித்து வைக்க வேண்டும். விதைநேர்த்தி, கடினமாக்கல் விதைநேர்த்தி, விதை உருண்டைகளாக்குதல், விதைபூச்சு மற்றும் உயிரிதிணிப்பு ப�ோன்றவை விதை சேமித்தலில் நவீன வழிமுறைகளாகும். விதைகளானது மூங்கில் அமைப்புகளிலும், மண் அமைப்புகளிலும் சேமிப்பது பாரம்பரிய வழிமுறைகளாகும். கிராமங்களில் விவசாயிகள் சேமித்த மொத்த விதைகளையும் சிமெண்ட் தொட்டிகளிலோ, உலோக அல்லது நெகிழி உருளைகளிலோ சேமித்து வைப்பர். உறைகுளிர் சேமிப்பு, மரபணு வங்கி, சுவல்பார்ட் விதை வங்கி ப�ோன்றவை விதைகளை மிக நீண்ட நாட்களுக்குச் சேமிக்கும் நவீன விதைசேமிப்பு வழிமுறைகளாகும்.


Classes
Quiz
Videos
References
Books