தாவர வளர்ச்சியின் பண்புகள்

  • செல் அளவில் புரோட்டோபிளாசம் அதிகரிக்கிறது.
  • தொடர்ச்சியான செல் பகுப்பினால் தண்டு மற்றும் வேர்கள் வளர்ச்சியில் வரம்பற்று காணப்படுகின்றன. இது திறந்த வகை வளர்ச்சி (open form of growth) என அழைக்கப்படுகிறது.
  • நுனி ஆக்குத்திசு செயல்பாட்டினால் தாவரத்தின் முதல்நிலை வளர்ச்சி நடைபெறுகிறது. தண்டு நுனிப்பகுதியில் புதிய செல்கள் சேர்வதால் தாவரத்தின் நீள்வளர்ச்சிக்கு இது காரணமாகிறது.
  • இரண்டாம் நிலை வாஸ்குலக் கேம்பியம் மற்றும் கார்க்கேம்பியம் செயல்பாட்டினால் புதிய செல்கள் சேர்வதால் குறுக்களவு அதிகரிக்கிறது.
  • இலைகள், மலர்கள், மற்றும் கனிகள், வரம்புடைய வளர்ச்சி அல்லது நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி அல்லது மூடிய வகை வளர்ச்சி உடையது.
  • மானோகார்ப்பிக் ஒருபருவ தாவரங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டும் மலர்தலைச் செய்து, பின் இறந்து விடுகிறது. எடுத்துக்காட்டு: நெல், அவரை.
  • மானோகார்ப்பிக் ஆண்டுகள் வாழ்ந்து ஒரு முறை மட்டும் மலர்தலைச் செய்கிறது. எடுத்துக்ககாட்டு: மூங்கில்.
  • பாலிகார்ப்பிக் பலபருவத் தாவரங்கள் வாழ்நாளில் ஒவ்வொரு வருடமும் மலர்தலைச் செய்து பல ஆண்டுகள் வாழ்கின்றன. எடுத்துக்ககாட்டு: தென்னை

Bamboos
Bamboos

Saguaro Cactus
Saguaro Cactus

வளர்ச்சி இயங்கியல் (Kinetics of growth)

இது செல்களின் இயக்கம் அல்லது விரிவாக்கம் பற்றிய ஆய்வைக் குறிக்கிறது.

வளர்ச்சி வீதத்தின் படிநிலைகள்

வளர்ச்சியின் முதல்நிலையிலிருந்து கடைசி நிலை வரை உள்ள வளர்ச்சி வீதம் மொத்த வளர்ச்சி காலம் எனப்படும். வளர்ச்சியையும், வளர் காலத்தையும் கொண்டு வரைபடம் ஒன்று வரைந்தால் அது ஆங்கில எழுத்து ‘S’ வடிவில் இருக்கும். இதற்குச் சிக்மாய்டு வளைவு (மொத்த வளர்ச்சி வளைவு) என்று பெயர். இது நான்கு கட்டங்களைக் கொண்டுள்ளது. அவையாவன

  1. தேக்கக் கட்டம்
  2. மடக்கைக் கட்டம்
  3. வீழ்ச்சிக் கட்டம்
  4. முதிர்ச்சிக் கட்டம் அல்லது நிலைக் கட்டம்

தேக்கக் கட்டம்

புதிய செல்கள் ஏற்கனவே உள்ள செல்களிலிருந்து மெதுவாகத் தோன்றுகிறது. இவை தண்டு, வேர் மற்றும் கிளைகளின் நுனிகளில் காணப்படுகிறது.இது வளர்ச்சியின் முதல் கட்டமாகும். அதாவது வளர்ச்சி தொடங்கும் கட்டமாகும்.

மடக்கைக் கட்டம்

இங்குப் புதிய செல்சுவர் பொருட்கள் படிவதால் புதிதாக உருவான செல்கள் அளவில் வேகமாக அதிகரிக்கிறது. செல்பகுப்பு மற்றும் செயலியல் நிகழ்ச்சிகள் மிக வேகமாக நடைபெறுவதால் வளர்ச்சி வீதம் உச்சக்கட்டத்தை அடைகிறது. புரோட்டோபிளாச பருமன் அதிகரிக்கிறது. இதன் விளைவாக விரைவான வளர்ச்சியினால் தண்டில் கணுவிடைப்பகுதி நீட்சி நடைபெறுகிறது.

வீழ்ச்சிக் கட்டம்

வளர்சிதை மாற்றம் குறைவதாலும், செல்காரணிகள் அல்லது செல் வெளிக்காரணிகள் அல்லது இரண்டு காரணிகளும் கட்டுப்படுத்துவதாலும் வளர்ச்சி வீதம் குறைகிறது.

முதிர்ச்சிக் கட்டம் அல்லது நிலைக் கட்டம்

இந்த கட்டத்தில் செல்சுவரின் உட்புறப் பக்கத்தில் புதிய செல்சுவரில் பொருட்கள் படிவதால் செல்சுவர்தடிமன் அதிகரிக்கிறது. எனவே, இங்கு வளர்ச்சிவீதம் பூஜ்ஜியம் ஆகிறது.

வளர்ச்சி வீதத்தின் வகைகள்

குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் வளர்ச்சி அதிகரிப்பு வளர்ச்சி வீதம் எனப்படும். ஓர் உயிரினம் அல்லது உயிரினத்தின் பாகம் சீரான வளர்ச்சி வீதத்திலும் அல்லது ஜியோமித வளர்ச்சி வீதத்திலும் அல்லது இரண்டையும் சார்ந்தோ செல்களை உருவாக்குகிறது.

எண்கணித வளர்ச்சி வீதம் (Arithmetic growth rate)

தாவரப் பாகங்களின் வளர்ச்சியை வளர்ச்சி காலத்திற்கு எதிராக வரைபடம் வரைந்தால் அது நேர்க்கோட்டில் இருக்கும். இத்தகைய வளர்ச்சி வீதம் எண்கணித வளர்ச்சி வீதம் எனப்படும்.

  • வளர்ச்சி வீதம் நிலையானதாகவும், வேகத்திலும் நடைபெறுகிறது.
  • இரண்டு சேய்களில் ஒன்று மட்டும் செல்பகுப்பில் ஈடுபடுகிறது.
  • தொடர்ந்து ஒரு செல் மட்டும் செல்பகுப்பில் ஈடுபடும். மற்ற செல்கள் செல்சுழற்சியை நிறுத்தி வேறுபாடு அடைந்து முதிர்ச்சி அடைகிறது.
  • ஒவ்வொரு செல்பகுப்பு முடிவிலும் ஒரு செல் மட்டும் செல்பகுப்பில் ஈடுபடும். மற்றொரு செல் உடல் செல்லாக மாறுகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு செல் பகுப்படைந்து, முதல் பகுப்பு முடிவில் ஒன்று தொடர்ந்து பகுப்படையும் செல்லாகவும், மற்றொன்று உடலச் செல்லாகவும் உள்ளன. இரண்டாவது பகுப்பு முடிவில் இரண்டு உடலச் செல்களும், மூன்றாவது பகுப்பு முடிவில் மூன்று உடலச் செல்களும் உருவாகின்றன. இதே நிகழ்வு அடுத்தடுத்த செல்பகுப்பிலும் ஏற்படுகிறது.

எண்கணித வளர்ச்சி வீதம்
எண்கணித வளர்ச்சி வீதம்

தாவரங்களில் பகுப்படையும் ஒரு செல், ஒரு மில்லியன் முறை பகுப்பு நிகழ்வதாகவும், ஒவ்வொரு பகுப்பிற்கும் ஒருநாள் தேவைப்படுவதாகவும் கொண்டால் இந்த ஒரு மில்லியன் பகுப்பிற்கு ஒரு மில்லியன் நாட்கள் அல்லது 2739.7 ஆண்டுகள் ஆகிறது. எண்கணித வளர்ச்சி வீதத்தில் குறைந்த எண்ணிக்கையில் செல்களைப் பெற்ற சிறிய தாவரப்பாகங்களில் எடுத்துக்காட்டாக, நிகழ்கின்றன. புறத்தோல் தூவிகளில் இவ்வகையான வளர்ச்சி வீதம் நிகழ்கிறது. இத்தூவிகளில் ஒரு அடிச்செல்லும், அதிலிருந்து உருவான 5 முதல் 10 செல்களும் காணப்படுகின்றன.

படத்தில் காட்டியுள்ளவாறு காலத்திற்கு, எதிராகத் தாவரப் பாகங்களின் வளர்ச்சியை வரைபடம் வரைந்தால் நேர்க்கோட்டு வளைவு கிடைக்கிறது (படம் 15.2). இதைக் கீழ்க்கண்ட வாய்ப்பாடு மூலம் விளக்கலாம்.

நிலையான நேர்கோட்டு வளர்ச்சி
நிலையான நேர்கோட்டு வளர்ச்சி

\(L_t = L_0 + r_t \newline L_t = \text{ குறிப்பிட்ட காலத்தில் வளர்ச்சி ‘t’ } \newline L_o = \text{ குறிப்பிட்ட காலத்தில் வளர்ச்சி ‘பூஜ்யம்’ }\newline r = \text{ ஓரலகு காலத்தில் நீட்சியடைதலின் வீதம் } \newline\)

ஜியோமெடிக் வளர்ச்சி வீதம் (Geometric Rate)

பல்வேறு உயர் தாவரங்கள் மற்றும் தாவரப் பாகங்களில் ஜியோமெடிக் வளர்ச்சி வீதம் காணப்படுகிறது. அளவு மற்றும் எடை அதிகரிப்பைக் கொண்டு இதை அளக்கலாம். தாவர வளர்ச்சியில் ஓர் உயிரினத்தின் அல்லது திசுவின் அனைத்துச் செல்களும், மைட்டாடிக் செல்பகுப்படைந்து இந்த ஜியோமெடிக் வளர்ச்சி நிகழ்கிறது. எடுத்துக்காட்டாகப் படம் 15.3-ல் காட்டியுள்ளவாறு மூன்றாவது செல்பகுப்பு முடிவில் உருவாகும் எட்டுச் செல்களும் ( \(2^3 = 8\) ), 20-வது செல்பகுப்பு முடிவில் \(2^{20} = \text{1,048,576 செல்களும்}\) உருவாகின்றன. உயர் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இம்முறையில் வளர்ச்சி வீதம் உருவாகிறது. விலங்குகளில் அதிகளவில் காணப்படுகிறது. ஆனால் இளம் தாவரங்களைத் தவிர தாவரங்களில் அரிதாகக் காணப்படுகிறது.

ஜியோமித வளர்ச்சி
ஜியோமித வளர்ச்சி

ஜியோமித வளர்ச்சி வீதத்தைக் கீழ்க்கண்டவாறு எழுதலாம்.

\(W_t = W_0e^{rt} \newline W_t = \text{ இறுதி அளவு (எடை, உயரம் மற்றும் எண்ணிக்கை) } \newline W_o = \text{ தொடக்க வளர்ச்சியின் அளவு }\newline r = \text{ வளர்ச்சி வீதம் } \newline t = \text{ வளர்ச்சி காலம் } \newline e = \text{ இயற்கை மடக்கைச் சார் அடி } \newline \newline\)

இங்கு ‘r’ என்பது ஒப்பீட்டு வளர்ச்சி வீதம் மற்றும் தாவரங்களில் உருவாகும் புதிய தாவரப் பொருட்களைக் கணக்கிடும் முறைதிறன் குறியீடு எனக் கூறலாம். ஆகையால் இறுதி அளவு \(W_1\) தொடக்க அளவு \(W_0\) சார்ந்து இருக்கும்

கருவாக்கத்தில் எண்கணித வளர்ச்சி மற்றும் ஜியோமித வளர்ச்சி (Arithmetic and Geometric Growth of Embryo)

தாவரங்களின் வளர்ச்சியில் எண்கணித வளர்ச்சி வீதம் மற்றும் ஜியோமித வளர்ச்சி வீதம் ஆகிய இரண்டும் பங்காற்றுகின்றன. தாவரக் கருநிலை வளர்ச்சியில் ஜியோமித வளர்ச்சி வீதம் காணப்படுகிறது. கரு வளர்ந்து தாவரம் உருவானதும் அதன் வேர் மற்றும் தண்டு நுனிகளில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் செல்பகுப்பு நடைபெறும். இங்கு எண் கணித வளர்ச்சி வீதத்தைக் காணலாம். ஆனால் பகுப்பிற்குப் பின் உருவான புதிய செல்கள் முதிர்ச்சி அடைந்து சிறப்பான வளர்சிதை மாற்றப் பணிகளை மேற்கொள்ளத் த�ொடங்குகின்றன (படம் 15.4) ம�ொத்தத்தில் தாவரங்களில் பகுப்படையும் புதிய செல்கள், முதிர்ந்த செல்கள், வயதான செல்கள் ஆகிய அனைத்தையும் காணலாம்.

கருவாக்கத்தில் எண்கணித வளர்ச்சி மற்றும் ஜியோமித வளர்ச்சி
கருவாக்கத்தில் எண்கணித வளர்ச்சி மற்றும் ஜியோமித வளர்ச்சி

உயிரின் தொகுப்பின் வளர்ச்சியின் அளவு சார்ந்த ஒப்பீடு இரண்டு முறைகளில் அடங்குகின்றது. அடக்கமாக,

அட்டவணை 1:

  1. முழு வளர்ச்சி வீதம் (Whole Growth Rate): முழு வளர்ச்சி வீதம் ஒப்பீட்டு வளர்ச்சி வீதத்திற்கு சார்ந்த அளவை குறிக்கின்றது. இது வளர்ச்சி ஏற்பட்ட பிற்குப் பின் உருவான செல்களின் அளவு அல்லது நிலைக்குப் பின் ஏற்படும் மொழிபெயர்ப்பை குறிக்கின்றது.

  2. ஒப்பீட்டு வளர்ச்சி வீதம் (Incremental Growth Rate): ஒப்பீட்டு வளர்ச்சி வீதம், பிற்குப் பின் உருவான புதிய செல்களின் அளவை குறிக்கின்றது. இது பிற்கு உருவான செல்களின் அளவுக்கு முன்னும் ஏற்படும் மொழிபெயர்ப்பை குறிக்கின்றது.

இந்த அளவுகள் முதல் முறையில் உருவான செல்களின் அளவு அல்லது நிலைக்கு முன்னும் முழு வளர்ச்சி வீதம் குறிப்பிடுகின்றது. இவற்றின் பொருள், பிற்கு உருவான செல்கள் முழு வளர்ச்சி வீதத்தில் அடங்கினால் அவைகளின் வளர்ச்சி ஏற்படும் விரைவுக்ரியை அடுத்த நேரத்தில் பார்க்க உதவுகின்றன.

முழு வளர்ச்சி வீதம் மற்றும் ஒப்பீட்டு வளர்ச்சி வீதத்தை ஒப்பீடு செய்தல்
முழு வளர்ச்சி வீதம் மற்றும் ஒப்பீட்டு வளர்ச்சி வீதத்தை ஒப்பீடு செய்தல்

தாவர வளர்ச்சியை அளவிடுதல்

ஆய்வு: 1. வில் ஆக்ஸனோமீட்டர்:

தாவரத் தண்டின் நீள்வளர்ச்சியை எளிதாக வில் ஆக்ஸனோமீட்டர் மூலம் அளக்கலாம். சிறிய கப்பியின் மைய அச்சுடன் இணைக்கப்பட்டுள்ள நீண்ட குறிமுள் அளவுகள் குறிக்கப்பட்ட வில் மீது நகருமாறு அமைக்கப்பட்டுள்ளது. நூலின் ஒரு முனை தண்டின் நுனியுடன் கட்டப்பட்டிருக்கும். மற்றொரு முனை எடைக்கல்லுடன் கட்டப்படுவதால் கப்பி மீது நூல் இறுக்கமாகச் செல்கிறது. தாவரத் தண்டின் நுனி உயரத்தில் அதிகரிக்கும் போது கப்பி நகர்வதால் குறிமுள் அளவுகள் குறிக்கப்பட்ட வில்லில் கீழ்நோக்கி நகர்கிறது. அளவுகள் குறிக்கப்படுகிறது. கப்பியின் ஆரம் மற்றும் குறிமுள்ளின் நீளம் ஆகியவற்றின் அளவுகளைப் பயன்படுத்தித் தண்டின் உண்மையான நீள் வளர்ச்சியை அறியலாம். குறிமுள் நகர்த்த ஆரம் 10 செ.மீ, கம்பியின் ஆரம் 4 செ.மீ, குறிமுள்ளின் நீளம் 20 செ.மீ என இருந்தால் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.

தாவரத்தின் உண்மையான வளர்ச்சி = ( குறிமுள் நகர்ந்த தூரம் x கப்பியின் ஆரம் ) / குறிமுள்ளின் நீளம்

தாவரத்தின் உண்மையான வளர்ச்சி = (10 20 செ,மீ x 4 20 செ,மீ ) / 20 செ,மீ = 2 செ,மீ

வில் ஆக்ஸனோமீட்டர்
வில் ஆக்ஸனோமீட்டர்


Classes
Quiz
Videos
References
Books