ஆலமரம் ஆமிரக்கணக்கான ஆண்டுகள்‌ தொடர்ந்து வளர்கிறது, மற்ற தாவரங்கள்‌ குறிப்பாக ஓராண்டு தாவரங்கள்‌ குறிபிட்ட பருவகாலககில்‌ அல்லது ஓராண்டில்கள்‌ வளர்ச்சி நின்றுவிடுகிறது. நீங்கள்‌ இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறதா? எவ்வாறு சைகோட்டிலிருந்து கரு வளர்ச்சி அடைந்து இளஞ்செடியாக வளர்கிறது?தாவரப்‌ பாகங்கள்‌ ஏற்கனவே உள்ள மாசங்களிலிருந்து என்வாறு உருவாகிறது? அனவு வடிவம்‌ எண்ணிக்கை பருமன்‌ மற்றும்‌ உலர எடையில்‌ மரற்றமடையாத நிலையான அதிகரிப்பு வளர்ச்சி என வரயறுக்கப்படுகிறது. தாவர வளர்ச்சியில் செல்பகுப்பு, செல்நீட்சியடைதல், வேறுபாடு அடைதல் மற்றும் முதிர்ச்சியடைதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

மூங்கில் பசுமைமாறாப் புல் வகையாகும். சில சிற்றினங்கள் நாள் ஒன்றுக்குச் 91 செ.மீ. வீதம் வளரும் தாவரங்களாகும். கள்ளித் தாவரங்கள் (காக்டஸ்கள்) மரம் போன்ற மற்றும் மிகவும் மெதுவாக வளரும் தாவரங்களாகும். எடுத்துக்காட்டாகச், சகுவாரோ (Saguaro) என்ற கள்ளித் தாவரத்தின் வளர்ச்சிவீதம் முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒரு அங்குலம் ஆகும். மேலும் இத்தாவரம் 60 ஆண்டுகள் வரை மலராதிருக்கிறது. இதனுடைய ஆயுட்காலம் 150 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. மேலும் இதன் பக்கக் கிளைகள் வளர 75 – 100 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்கிறது.

வளர்ச்சி அளவிடக்கூடியது. மக்காச்சோள வேரின் நுனி ஆக்குத்திசுவில் உள்ள ஒரு செல் பகுப்படைந்து ஒருமணி நேரத்தில் 17,500 புதிய செல்களும், தர்பூசணி தாவரத்தில் ஒரு செல் 3,50,000 முறை அளவில் பெரிதாதலும் வியப்பை அளிக்கிறது.


Classes
Quiz
Videos
References
Books