வீடு பெற நில்
Veedu Pera Nil
முக்திக்கான வழியை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
Practice righteous deeds to attain divinity
நியாய தர்ம வழி நடந்து நெறிமுறைகளை பின்பற்றி வீடு பெறுதல் (மோட்சம் பெறுதல், முக்தி அடைதல்). இந்திய ஞான மரபு வீடு, மோட்சம், முக்தி என்பது மறுபிறப்பற்றநிலை மிக உன்னதமான நிலை என்றுரைக்கிறது, இந்நிலையே மானுடராய் பிறக்கும் யாவரும் அடைய முயற்சிக்கவேண்டிய நிலை என்று அறிவுறுத்துகிறது.
ஔவை இயற்றி ஆத்திசூடி, உயிர் எழுத்துக்களை (உயிர் வருக்கம்) கற்ப்பிக்கும் மழழைகளுக்கான செய்யுள் மட்டுமல்ல (அனேகமாகயிதற்காக மட்டுமே நாம் பயண்படுத்திவருகிறோம் என்பதற்காக இந்த வரி இங்கே இணைக்கப்படுகிறது)
ஓரு முழுமையான வாழ்வியல் அறிவுறுத்தலும் என்பதை இந்த செய்யுள் எடுத்துக்காட்டுகிறது. முதல் உயிர் வருக்கத்தில் தொடங்கி அடுத்த அடுத்த வருக்கங்களில் செய்யுள் கருத்துக்களின் ஆழம் வீரியம் அவசியம் ஆத்திசூடியை எக்காலத்திற்க்கும் ஏற்ற நூலாக தாங்கி நிற்கிறது.
மற்றவை:
‘வீடு’ என்ற உண்ணதத்தை கருதிதான் இதே சொல் நம் இயல்பான தினபடி வாழ்க்கையிலும் ‘வீடு – இல்லம்’ என்று பயண்படுமளவு செய்யப்பட்டதோ? காலத்திற்கே வெளிச்சம்! எப்படியிருப்பினும் ‘வீடு’ என்பதன் உண்ணதம் புரிந்து ‘வீடு – இல்லம்’ எப்படி அமைத்துக்கொள்ள வேண்டுமேன்பதை பொற்றுவோம்.