ஐயமிட்டு உண்
Ayyamittu Unn
யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்
Share your food with the needy, before you eat
விவாதம்
pkarthikeyaraja;-
உணவு உண்ணும் போது இந்த உணவு நமக்கு ஏதேனும் நோயை உருவாக்குமோ, ஒவ்வாமை ஏற்படுமோ, என்ற சந்தேகம் இல்லாமல் மனதில் எந்த அருவருப்பு உணர்வும் இல்லாமல் முழு மனதுடன் கிடைத்த உணவை உண்ண வேண்டும்.
( -! இந்த பொருள் உங்களுக்கு தவறாக தெரியலாம் ஆனால் ஏற்பது இகழ்ச்சி என்பதற்கு பின் பிச்சையிட்டு உண் என்று ஔவை சொல்லி இருப்பார் என்று எண்ணவில்லை. —!)
அறம்செயவிரும்பு;-
இந்த செய்யுளிள் ‘ஐயமிட்டு’ (ஐயமின்றி என்றில்லாமல்) என்றிருப்பதால் அதன் அடிப்படையில் ‘ஐயம்’ என்ற சொல்லுக்கு ‘ஈதல்’ என்றடிப்படையில் பொருள் கொண்டால் ‘யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டபின் உண்’ (கேட்பவற்க்கு அளித்துவிட்டு உண்) என்பது மிக பொருத்தம் என்று எண்ணுகிறோம்.
‘…..ஏற்பது இகழ்ச்சி என்பதற்கு பின் பிச்சையிட்டு உண் என்று ஔவை சொல்லி இருப்பார் என்று நான் எண்ணவில்லை….’ இங்கே இந்திய மரபு முறையில் (சமநிலை அடையவே அறிவுறைகள் சொல்லப்பட்டிருக்கம் என்று) அனுகினால் இந்த செய்யுள் அமைப்பு சிறப்பே. அதாவது ‘ஏற்பது; பெறுதல்’ தவிர்க்கலாமென்றும் ‘ஐயம்; ஈதல் (கொடுத்தல்)’ நல்லதென்றும்.