இயல்வது கரவேல்.
Iyalvadhu Karavael
இயன்றவற்றை மறைக்காதே
Perform abilities upon need; don’t conceal them
இயல் – தன்மை, கோட்பாடு, இலக்கியத்தமிழ்
இயல்வது – (இயல்) செயல்பாட்டில், நடைமுறையில், (இயன்ற வரை – முடிந்த வரை)
கர – மறைத்தல், ஒளித்தல்,
கரவேல் – (கர) செய்யாதே; மறைக்காதே, ஒளிக்காதே
தன்மை – செயல்படுத்தக்குடிய – மறைத்தல் – செய்யாதே, இதன் அடிப்படையில் எளி மையான பொருள்படும்படி இவ்வாறு உரைக்கலாம் ‘முடியுமெனில் செய்; மறைக்காதே’ . பசு (கோ) தன் கன்றுக்கு தேவையானது பால் போக மீதம் அனைத்தையும் கறப்பவருக்கு அளிக்கும், தன் மடியை மறைத்து (மேல் ஏற்றியே) வைத்திருக்கும் தன் கன்றை பார்த்து பின் கன்று பால் அருந்திய பிறகே கறப்பவருக்கு சுரக்கும். இதனாலையே கரந்த பால் எனப்பட்டதோ?
இதில் தன்மை ( இயல்வது ) எத்தகைய தன்மைகளை குறிக்கிறது என்றால் அதற்கு ‘அனைத்தும்’ என்றே சொல்லவேண்டும். திருக்குறளே மிகப் பெரும் சான்று, திருக்குறள் தொகுக்கப்பட்டுள்ளவிதம் – முதல் தளம் ‘பால்’ (முப்பால்) என்று தொகுக்கப்பட்டுள்ளது, இரண்டாம் தளமாக ஒவ்வொரு பாலும் ‘இயல்’ என்று தொகுக்கப்பட்டுள்ளது மற்றும் மூன்றாம் தளமாக ஒவ்வொரு இயலும் ‘அதிகாரம்’ என்று தொகுக்கப்பட்டுள்ளது.
திருக்குறள் உதவி, நன்றி;
http://www.thirukkural.com/p/blog-page_3439.html