அஃகஞ் சுருக்கேல்

Akkam Surukael

தானியங்களை குறைத்து விற்காதே.
Always sell items to the right quantity for the price

தானியத்தை அளந்து விற்கும்பொழுது அளவிற் குறைக்காது சீராக அளந்து கொடுத்தல் வேண்டும். பண்டமாற்றுமுறை மிகுந்த அந்நாட்களில், தானியமே முதன்மையான உற்பத்திப் பொருளாக இருந்ததாலும் அதனை மரக்கால், படி ஆகியவற்றால் அளந்து வணிகம் செய்ததாலும், அவ்வணிகம் நெறிமுறை பிசகாது செம்மையாக நடைபெற வேண்டுமென்பதற்காக ஔவைப் பிராட்டியார் இவ்வாறு கூறியருளினார்.
வர்த்தகம் பெருகியுள்ள இந்நாட்களில் ஔவையார் கூறிய இந்த நெறிமுறையை பின்பற்றுவது, சமூகம் நன்னெறியிற் செல்லுதற்குப் பெரிதும் உதவும்.
(அஃகம் – தானியம்)


Classes
Quiz
Videos
References
Books