செய்வன திருந்தச் செய்.

Seivana Thirundha Sei

செய்யுஞ் செயல்களை திருத்தமாக செய்
What ever is being done, let it be correct with perfection

எந்த ஒரு செயலாகயிருந்தாலும் அதற்கான முறைப்படி சரியாகவும் நேர்த்தியாகவும் செய்தல் நன்று என்று வழியுருத்திகிறது இந்த செய்யுள்.

’’செய்வன திருந்தச் செய்" திருந்த செய்த்தினால் இன்றும் பல (தஞ்சை பெரிய கோவில், தாஜ்மகால், இஜிப்ட் பிரமிட்கள்..) வரலாற்று சின்னங்கள்/தலங்கள் காலம் கடந்து இன்றும் நிலைத்து நின்றுகொண்டிருக்கிறது.

சிறுகதை:
நாலூரிலிருந்து ஒரு காளிப்பொட்டல் சிறு கன்மாய் கடந்து கருவூருக்கு போகவேண்டும் இங்கு தான் மணிகன்டன் வீடு. இந்த குறுகலான பாதை வழியே வருவதுதான் அவன் வளக்கம்.

அன்று பாதையிக்கம் கன்மாயிக்கும் தடுப்பாக இருந்த வேளிகற்களில் ஒன்று கீழே விழுந்திருந்தது அதை கவனித்த மணிகன்டன் தனக்கு இடையுறுயில்லையேன்றாலும் இந்த வழியில் வரும் எவருக்கேனும் இடஞ்சலாகயிருக்கும் என்றேன்னினான்.

சூற்றம்மும் பார்த்தான் பின் “முத்தண்ணே.. முத்தண்ணே..” என்ற அவரை அருகில் அழைத்தான்.
என்ன தம்பி..
அண்ணே இந்த வேளிகல்லு விழுந்துபோச்சு இப்படியே கடந்தாக்க வண்டி ஊருக்குள வந்து போக சிரமமாயிருக்கம்..
எடுத்து ஓரமா போட்ருவோம் என்றார் முத்தண்னண்..
அண்ணே ஒரே வேலையா அப்படிய உன்றியே வச்சுருவோம். வேளிக்கு வேளியும் ஆச்சு போக்குவரத்துக்கு இடையுறுமில்லாம ஆச்சு என்றான்.
அதுவும் சரிதான்..
பாத்து கவனமாக பிடிச்சுக்கோ காலுல அடிபட்டுறபோகுது நான் இப்பிடியிருந்து தூக்குறேன். இருவருமாக வேளிகல்லை உன்றிவிட்டார்கள்.

நல்லது பன்னுற தம்பி! என்று வாழ்த்தினார் முத்தண்னண்

மணிகன்டனுக்கு நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவன் தம்பி கதிர் நேற்று வீட்டில் பாடநூலில் செய்யுள் “செய்வனதிருந்த செய்” என்று படித்தது நினைவு வந்தது.


Classes
Quiz
Videos
References
Books